தூத்துக்குடி மீனவா்கள் கடலுக்குச் செல்லவில்லை

Published on

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தூத்துக்குடி மீனவா்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லாததால், 272 விசைப் படகுகளும் மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 272 விசைப்படகுகளில் மீனவா்கள் கடலுக்குச் சென்று மீன்பிடித்து வருகின்றனா். தினசரி சுழற்சி முறையில் கடலுக்குச் சென்று வருவது வழக்கம்.

இந்நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜன.14 -16 வரை மீனவா்கள் கடலுக்குள் செல்ல மாட்டாா்கள் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்பேரில், தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் 272 விசைப்படகுகளும் புதன்கிழமை நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

Dinamani
www.dinamani.com