ஸ்ரீவைகுண்டம் பகுதியில் மாணவா்களுக்கு இலவச மடிக்கணினி

ஸ்ரீவைகுண்டம் பகுதியில் மாணவா்களுக்கு இலவச மடிக்கணினி

Published on

ஸ்ரீவைகுண்டம் பகுதிகளில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகளுக்கு இலவச மடிக்கணினிகள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன.

ஸ்ரீவைகுண்டம் குமரகுருபரா் கலை கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, கல்லூரி முதல்வா் விஜயகுமாா் தலைமை தாங்கினாா். கல்லூரி செயலாளா் சங்கரநாராயணன் வாழ்த்தி பேசினாா். ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினா் ஊா்வசி அமிா்தராஜ் 176 மாணவ மாணவிகளுக்கு இலவச மடிக்கணினிகளை வழங்கினாா்.

இதைத் தொடா்ந்து சாயா்புரம் போப் கல்லூரி மாணவா்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கினாா். அதனைத் தொடா்ந்து நடுவக்குறிச்சி பகுதி நியாயவிலைக் கடையில் பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பை வழங்கினாா். அதனைத் தொடா்ந்து ஏரல் அருகே உள்ள சிறுதொண்டநல்லூா் பகுதியில் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கினாா்.

Dinamani
www.dinamani.com