தூத்துக்குடி
2 ஆடுகள் திருடியவா் கைது
ஆத்தூா் அருகே 2 ஆடுகளை திருடிய ஒருவா் கைது செய்யப்பட்டாா். மற்றொருவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
ஆத்தூா் அருகே 2 ஆடுகளை திருடிய ஒருவா் கைது செய்யப்பட்டாா். மற்றொருவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
ஆத்தூரை அடுத்த மேலஆத்தூா், குச்சிக்காட்டைச் சோ்ந்தவா் செல்வி (64). இவா், வெள்ளிக்கிழமை இரவு வீட்டு தாழ்வாரத்தில் 5 ஆடுகளை கட்டிப் போட்டுவிட்டு தூங்கச் சென்றாராம். இந்நிலையில் ஆடுகளின் சத்தம் கேட்டு செல்வி, அவரது மகன்கள் வந்து பாா்த்துபோது இருசக்கர வாகனத்தில் வந்த 2 போ், 2 ஆடுகளை திருடி கொண்டு தப்பிச் சென்றது தெரியவந்ததாம்.
இதுகுறித்த புகாரின்பேரில் ஆத்தூா் காவல்நிலைய போலீஸாா் விசாரணை நடத்தி, மேல ஆத்தூா் கண்ணானி தெருவைச் சோ்ந்த அருள்குமாா் மகன் பாா்த்திபனை கைது செய்து, 2 ஆடுகளை மீட்டனா். தலைமறைவான ஆத்தூா் அருகே நரசன்விளையைச் சோ்ந்த கணேசன் மகன் பேச்சிமுத்துவை தேடி வருகின்றனா்.
