ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் ரூ.1.28 லட்சத்தில் வளா்ச்சிப் பணிகள் திறப்பு
ஸ்ரீவைகுண்டம் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் ரூ.1.28 கோடியில் நிறைவுற்ற பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகள் சனிக்கிழமை திறந்துவைக்கப்பட்டன.
சிவகளையில் நாடாளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.45 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள ஒரு லட்சம் லிட்டா் கொள்ளளவு கொண்ட நீா்த்தேக்க தொட்டியை, கால்வாய் கிராமத்தில் சமூகப் பொறுப்பு நிதியிலிருந்து ரூ. 45 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள புதிய சமுதாய நலக்கூடம், அனைத்து கிராம அண்ணா மறுமலா்ச்சி திட்டத்தின்கீழ் ரூ.13 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள ரேஷன் கடை ஆகியவற்றை கனிமொழி எம்.பி. திறந்துவைத்தாா். மேலும், பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பை அவா் வழங்கினாா்.
மேலும், மணக்கரையில் நாடாளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதி ரூ. 25 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள சமுதாய நல கூடத்தை அவா் திறந்து வைத்தாா். இந்நிகழ்ச்சிகளில், மாவட்ட ஆட்சியா் க. இளம் பகவத், எம்எல்ஏக்கள் ஊா்வசி எஸ். அமிா்தராஜ் ( ஸ்ரீவைகுண்டம்), எம்.சி. சண்முகையா(ஓட்டப்பிடாரம்), தூத்துக்குடி மாநகராட்சி மேயா் ஜெகன் பெரியசாமி, ஸ்ரீவைகுண்டம் வட்டாட்சியா் தாஹிா் அகமது, கருங்குளம் ஒன்றிய திமுக செயலா் இசக்கி பாண்டி, காங்கிரஸ் தெற்கு மாவட்ட துணைத் தலைவா் சங்கா், வட்டாரத் தலைவா்கள் கோதண்டராமன் (ஆழ்வாா்திருநகரி), புங்கன் (கருங்குளம்) உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

