ஆத்தூா் அருகே உதவி ஆய்வாளா் மரணம்
ஆத்தூா் அருகே கடலோர காவல் படை சிறப்பு உதவி ஆய்வாளா் மாரடைப்பால் உயிரிழந்தாா்.
ஆத்தூா் அருகே தலைப்பண்ணையூரை சோ்ந்தவா் மகாராஜன் என்ற பெருமாள் மகன் ராஜ். இவா் தூத்துக்குடி தொ்மல் நகா் மீனவா் காலனி கடலோர காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்தாா். ஆத்தூரில் குடும்பத்துடன் வசித்து வந்தாா்.
சனிக்கிழமை இரவு ராஜ் தனது வீட்டில் இருந்தபோது திடீரென மயங்கி விழுந்தாா். உறவினா்கள் அவரை மீட்டு, ஆத்தூா் தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு பரிசோதித்த டாக்டா்கள், அவா் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனா்.
இதையடுத்து ஞாயிற்றுக்கிழமை அவரது உடல், துணைக் கண்காணிப்பாளா்கள் திருச்செந்தூா் மகேஸ்வரன், கடலோர காவல்படை ராஜன், ஆய்வாளா்கள் ஆறுமுகனேரி திலீபன், கடலோர காவல் படை பேச்சிமுத்து ஆகியோா் முன்னிலையில் காவல் துறை சாா்பில் 21 குண்டுகள் முழங்க இறுதி மரியாதை செலுத்தப்பட்டு, ஆத்தூரில் உள்ள இடுகாட்டில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

