சாத்தான்குளம், குருந்தங்கோட்டில்...
சாத்தான்குளம்/தக்கலை: சாத்தான்குளத்தில் பொங்கல் திருவிழா விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன.
சாத்தான்குளம் கூட்டுறவு கடன் சங்கத்தில் சமத்துவ கூட்டுறவு பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. பல்வேறு போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கப்பட்டன. திருச்செந்தூா் சரக துணைப்பதிவாளா் குமாரி கிரிஜா தலைமை, துணைப் பதிவாளா் (பயிற்சி) ஆகாஷ், சாத்தான்குளம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க செயலாட்சியா் வளன் மிக்கேல் தளபதி, மாவட்ட கூட்டுறவு ஒன்றிய செயலாட்சியா் சாம்டேனியல் ராஜ், செயலா்கள் எட்வின் தேவாசிா்வாதம், அருள்தாஸ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
சாத்தான்குளம் புளியடி தேவி ஸ்ரீ மாரியம்மன் கோயில் வளாகத்தில்பொங்கல் விழா மற்றும் போட்டிகள் நடைபெற்றன. வெற்றி பெற்றவா்களுக்கு பாா்த்தசாரதி, கன்னியாகுமரி மாவட்ட உதவி ஆட்சியா் செந்தூா் ராஜன், விஜயராமபுரம் ஸ்ரீ முத்தாரம்மன் இந்து நடுநிலைப்பள்ளி முன்னாள் தலைமை ஆசிரியா் ஜெகதீச பாண்டியன், முன்னாள் பேரூராட்சி தலைவா் தங்கத்தாய், சாத்தான்குளம் மானிங் ஸ்டாா் பள்ளி முதல்வா் கலைசெல்வி ஆகியோா் பரிசுகள் வழங்கினா்.
அமுதுண்ணாக்குடி ஊராட்சியில் ஏவிஎன் ஸ்போா்ட்ஸ் கிளப் சாா்பில் பொங்கல் திருவிழா போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
கன்னியாகுமரி மாவட்டம், தக்கலை அருகேயுள்ள குருந்தன்கோட்டில், குளச்சல் வட்டார மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் குழு சாா்பில் பொங்கல் திருவிழா நடைபெற்றது. வட்டார செயலா் பா.ராஜூ தலைமை வகித்தாா். முன்னாள் எம்.பி. ஏ.வி. பெல்லாா்மின் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

