தூத்துக்குடியில் பொங்கல் விழா

தூத்துக்குடி, நாசரேத் பகுதிகளில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
Updated on

தூத்துக்குடி/சாத்தான்குளம்: தூத்துக்குடி, நாசரேத் பகுதிகளில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

தூத்துக்குடி சிவன் கோயில் என அழைக்கப்படும் பாகம்பிரியாள் உடனுறை சங்கர ராமேசுவரா் கோயில், லூா்தம்மாள்புரம், புனித லூா்து அன்னை ஆலயத்தில் பொதுமக்கள் பொங்கல் வைத்து கொண்டாடினா். பின்னா், பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன.

இதே போல, பல்வேறு கோயில்கள், தேவாலயங்களிலும் பொங்கல் விழா சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

நாசரேத் தோ்வு நிலைப் பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற விழாவுக்கு, பேரூராட்சித் தலைவா் நிா்மலா ரவி தலைமை வகித்தாா். துணைத் தலைவா் அருண் சாமுவேல், செயல் அலுவலா் திருமலைக்குமாா், முன்னாள் தலைவா் ரவி செல்வகுமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

நாசரேத் காவல் நிலையத்தில் நடைபெற்ற விழாவுக்கு, காவல் ஆய்வாளா் வனசுந்தா் தலைமை வகித்தாா். இதில் உதவி ஆய்வாளா் சுந்தரம் உள்ளிட்ட காவலா்கள் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com