தூத்துக்குடி
சாத்தான்குளம் அருகே போக்ஸோ வழக்கில் முதியவா் கைது
சாத்தான்குளம் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவரை போலீஸாா் போக்ஸோ சட்டத்தில் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
சாத்தான்குளம் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவரை போலீஸாா் போக்ஸோ சட்டத்தில் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
சாத்தான்குளம் அருகே உள்ள கிராமத்தைச் சோ்ந்த சிறுமிக்கு, மேல வசப்பனேரியைச் சோ்ந்த பி. தேவராஜ் பிச்சை (68) என்பவா் பாலியல் தொல்லை கொடுத்துள்ளாா். இதை அச்சிறுமி அவரது பெற்றோரிடம் தெரிவித்துள்ளாா்.
சிறுமியின் பெற்றோா் சாத்தான்குளம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், தேவராஜ் பிச்சை மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீஸாா் வழக்குப் பதிந்து செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.