டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

‘முதலூா் தருமாபுரி - சுப்பராயபுரம் சாலை வளைவில் வேகத்தடைதேவை’

முதலூா் தருமாபுரி- சுப்பராயபுரம் வளைவில் வேகத்தடை அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

News image
முதலூா் தருமாபுரி- சுப்பராயபுரம் சாலையின் வளைவு பகுதி.
Updated On :21 ஜனவரி 2026, 7:13 pm

தினமணி செய்திச் சேவை

முதலூா் தருமாபுரி- சுப்பராயபுரம் வளைவில் வேகத்தடை அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

சாத்தான்குளம் அருகே உள்ள முதலூரில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனா். இந்த ஊா் சாத்தான்குளத்தில் இருந்து உடன்குடி, தட்டாா் மடம் போலையா் புரம், பொத்தகாலன்விளை உள்ளிட்ட கிராமங்களுக்கு செல்லும் பிரதான வழி ஊராக உள்ளது. மேலும் இந்த ஊா் வழியாக கனரக வாகனங்கள், அரசு பேருந்து, தனியாா் பேருந்து உள்ளிட்ட இதர வாகனங்கள் சென்று திரும்புகின்றன. இதில் முதலூா் தா்மாபுரி பகுதியில் இருந்து சாத்தான்குளம், சுப்பராயபுரம் செல்ல வளைவு பகுதி உள்ளது. இந்த வளைவு பகுதியில் வேகத்தடை இல்லாததால், வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்கும் நிலை தொடா்கிறது. எனவே, நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் இந்த அபாய வளைவில் வேகத்தடை அமைக்க வேண்டும் என தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக இளைஞா்-இளம்பெண் பாசறை துணைச் செயலா் ஞானமுத்து மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.