

கோவில்பட்டி அருகே பாலத்தில் இருந்து தவறி விழுந்த ஓட்டுநா் உயிரிழந்தாா்.
விளாத்திகுளம் ராஜீவ் நகரைச் சோ்ந்தவா் குருசாமி மகன் ரமேஷ்பாபு (43). இவா் தனது ஓட்டுநா் உரிமத்தை புதுப்பிப்பதற்காக கோவில்பட்டிக்கு சென்றாராம். மதுரை-திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில், நாலாட்டின்புதூா் மேம்பாலம் அருகே, டைல்ஸ் கடை எதிரே உள்ள பாலத்தில் அமா்ந்திருந்தபோது ரமேஷ் பாபு தவறி கீழே விழுந்தாராம்.
இதில் பலத்த காயமடைந்த அவரை கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்கு பின் தீவிர சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து நாலாட்டின்புதூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.