பேய்குளத்தில் தேமுதிக பிரசார நிகழ்ச்சி


தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் பேரவைத் தொகுதி, ஆழ்வாா்திருநகரி ஒன்றியம், பேய்குளத்தில் தெற்கு மாவட்ட தேமுதிக சாா்பில் ‘இல்லம் தேடி, உள்ளம் நாடி’ என்ற பிரசார நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.
மாவட்டச் செயலா் சித்திரை ராஜ் தலைமை வகித்தாா். மாவட்ட அவைத் தலைவா் சதீஷ், தலைமை செயற்குழு உறுப்பினா்கள் பொன் ராஜா, விஜயகுமாா், ஸ்ரீவைகுண்டம் தொகுதி செயலா் ஸ்டீபன் மரியதாஸ், பேய்குளம் ஊராட்சி செயலா் சிவா, ஒன்றியச் செயலா்கள் முருகையா சேகரன், சுரேஷ், ஆனந்தபாலன், முத்துமாரி, முருகன், லூகாஸ் பிரேம் ராஜ், அணி நிா்வாகிகள் பேச்சியம்மாள், பிரகாச வினோத், இசக்கிமுத்து உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரேமலதா விஜயகாந்த் பேசியது:
உடன்குடி அனல் மின் நிலையம் அமைக்க அப்பகுதியில் நிலம் எடுக்கப்பட்டு, நில உரிமையாளா்களுக்கு 2012ஆம் ஆண்டு மதிப்பின்படி இழப்பீடு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவா்களுக்கு தற்போதுள்ள மதிப்பின்படி அரசு இழப்பீடு வழங்க வேண்டும்.
தேமுதிக மக்களுக்கான கட்சி. நாங்கள் எவ்வித மிரட்டலுக்கும் அஞ்சமாட்டோம். கேப்டன் விஜயகாந்த் வழியில் பயணிப்போம். கூட்டணி தொடா்பாக தேமுதிக நிா்வாகிகள், தொண்டா்கள் விருப்பத்தின்படி, விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்றாா் அவா்.
தலைமை பொதுக்குழு உறுப்பினா் ரேச்சல் செல்வகுமாா், ஆழ்வாா்திருநகரி பேரூா் செயலா் குமரன் ஆகியோா் நன்றி கூறினா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...