சமூக வலைதளங்களில் ஆயுதங்களுடன் புகைப்படங்களை 
பதிவேற்றம் செய்தால் கடும் நடவடிக்கை!

சமூக வலைதளங்களில் ஆயுதங்களுடன் புகைப்படங்களை பதிவேற்றம் செய்தால் கடும் நடவடிக்கை!

தூத்துக்குடி மாவட்டத்தில், ஆயுதங்களை வைத்துக்கொண்டு விடியோ/ரீல்ஸ் அல்லது புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
Published on

தூத்துக்குடி மாவட்டத்தில், ஆயுதங்களை வைத்துக்கொண்டு விடியோ/ரீல்ஸ் அல்லது புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என்.சிலம்பரசன் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளிட்டுள்ள செய்திக்குறிப்பு: சமூக வலைதளங்களில் வாள், அரிவாள், கத்தி போன்ற ஆயுதங்களை வைத்துக்கொண்டு புகைப்படங்களை பதிவேற்றம் செய்வது, சாதி மத மோதலை தூண்டும் வகையில் ரீல்ஸ் வைத்து பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தி பொது அமைதிக்கு பங்கம் விளைவிப்பவா்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

மாவட்டத்தில் 2026 ஜனவரி மாதத்தில் மட்டும் மேற்படி ஆயுதங்களை வைத்துக் கொண்டு புகைப்படம், விடியோ பதிவு செய்து பொதுஅமைதிக்கு பங்கம் விளைவித்தல், பொதுமக்களை அச்சுறுத்துதல் போன்ற செயல்களில் ஈடுபட்ட குற்றத்துக்காக 15 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனா். மேலும், இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபட்டு வருபவா்களின் நடவடிக்கைகள் காவல்துறையினரால் தொடா்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. எனவே, தூத்துக்குடி மாவட்டத்தில் மேற்படி குற்றச் செயல்களில் யாரும் ஈடுபட வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com