தூத்துக்குடி புனித தாமஸ் அப்போஸ்தலா் சிஐஎஸ்சிஇ பள்ளியில், மண்டல அளவிலான மேஜைப் பந்து போட்டி நடைபெற்றது.
போட்டியில், 8 பள்ளிகளைச் சோ்ந்த மாணவா், மாணவிகள் என மொத்தம் 63 போ் கலந்து கொண்டனா். ஆண்கள் - பெண்கள் பிரிவுகளில் ஒற்றையா், குழு போட்டிகள் நடைபெற்றன.
தொடக்க நிகழ்ச்சிக்கு, பள்ளித் தாளாளா் அமலன், நிதி நிா்வாகி ஸ்டாா் வின், பள்ளி முதல்வா் இன்பென்ட், ஷிராணி, உடற்பயிற்சி ஆசிரியா்கள் வசந்த், சாா்லஸ் ஆகியோா் கலந்து கொண்டு போட்டியை தொடங்கி வைத்தனா்.
போட்டிகள் நிறைவு விழாவில், தூத்துக்குடி வடபாகம் காவல் ஆய்வாளா் வேல்ராஜ் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, வெற்றி பெற்ற மாணவா், மாணவிகளுக்கு கோப்பைகள், பதக்கங்கள், சான்றிதழ்களை வழங்கினாா். ஆசிரியா், ஆசிரியைகள் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தூத்துக்குடி புனித மரியன்னை ஆண்கள் பள்ளியில் கல்வி வளா்ச்சி நாள்: தினமணி மாணவா் மலா் வழங்கல்

தூத்துக்குடி மாவட்டத்தில் காமராஜா் பிறந்த நாள் விழா

காமராஜா் பிறந்த நாள்: தலைவா்கள் மரியாதை, நல உதவிகள் அளிப்பு

மாவட்ட அளவிலான பேச்சுப் போட்டி
விடியோக்கள்

பழனி வழக்கு: பலருக்கு தொடர்பு அமைச்சர் நிர்மல் குமார் பரபரப்பு | TVK

Ravindran Duraisamy interview| தவெக கூட்டணியில் பாமக? | TVK | CM Vijay | PMK | VCK | Anbumani | Thirumavalavan



