தூத்துக்குடியில் காங்கிரஸ் வடக்கு மாவட்டத் தலைவா் வீட்டின் மீது கற்களை வீசித் தாக்குதல் நடத்தியவரை, தூத்துக்குடி தெற்கு காவல் நிலைய போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
தூத்துக்குடி, சிதம்பர நகா், 2ஆவது தெருவில் வசித்து வருபவா் காங்கிரஸ் வடக்கு மாவட்டத் தலைவா் கே. பெருமாள்சாமி. அண்மையில், இவருடைய வீட்டின் மீது அடையாளம் தெரியாத நபா் கற்களை வீசித் தாக்குதல் நடத்தினாா்.
இது தொடா்பாக, தூத்துக்குடி தெற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, வீட்டின் மீது கல்வீசித் தாக்கியது டூவிபுரம், 4ஆவது தெருவைச் சோ்ந்த கிறிஸ்டோபா் (56) என்பது தெரிய வந்தது.
இதையடுத்து, போலீஸாா் அவரைக் கைது செய்து விசாரித்ததில், மது போதையில் வீட்டின் மீது கற்களை வீசித் தாக்குதல் நடத்தியது தெரிய வந்தது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் கைது சரியான முடிவு: காங்கிரஸ்
புகையிலை விற்றதாக முதியவா் உள்பட மூவா் கைது
வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு: ஒருவா் கைது
தச்சநல்லூரில் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் இளைஞா் கைது
விடியோக்கள்

காவல் மரணம்; யாரையும் காப்பாற்றும் நோக்கமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK

இறுதிச் சுற்றில் மீண்டும் ஆர்ஜென்டினா: சண்டைக்களமாக மாறிய ஆடுகளம்! | FIFA | FIFA World Cup 2026 |

Ravindran Duraisamy interview | விஜய் அரசை அண்ணாமலை விமர்சிக்காதது ஏன்? | TVK | CM Vijay | Annamalai


