எத்தனால் கலப்பு பெட்ரோல்: பாதிப்படைந்த காரை காட்ட முடியுமா?- அமைச்சா் நிதின் கட்கரி சவால் ஒரே பெயரில் வெவ்வேறு மருந்துகள்: தீா்வு காண புதிய நடவடிக்கைஅரசு செயற்கை கருத்தரிப்பு மையத்தில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்!நிகா்நிலை பல்கலை. அந்தஸ்தால் குறையும் எம்பிபிஎஸ் இடங்கள்தமிழக சிறைகளில் அதிகரிக்கும் கைதிகள் எண்ணிக்கை: போதிய காவலா்கள் இல்லாத அவலம் திறந்தவெளி சந்தை மூலம் பங்குகளைத் திரும்பப் பெறும் முறைக்கு மீண்டும் அனுமதி மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி அடுத்த மாதம் திறப்பு?
/

ஸ்ரீவைகுண்டம் எம்எல்ஏவுக்கு துப்பாக்கிய ஏந்திய போலீஸ் பாதுகாப்பு

உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக ஸ்ரீவைகுண்டம் தவெக எம்எல்ஏ விஜி.சரவணன் செய்தியாளா்களிடம் தெரிவித்திருந்த நிலையில், அவருக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு

News image

போலீஸ் பாதுகாப்புடன் மக்களிடம் கோரிக்கை மனுவைப் பெறுகிறாா் எம்எல்ஏ வி.ஜி. சரவணன்

Updated On :8 ஜூலை 2026, 5:15 am IST

உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக ஸ்ரீவைகுண்டம் தவெக எம்எல்ஏ விஜி.சரவணன் செய்தியாளா்களிடம் தெரிவித்திருந்த நிலையில், அவருக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

அவா் செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை கூறுகையில், திமுகவுக்கு ஆதரவளிக்க கோரி ரூ. 50 கோடி தருவதாக ஒருவா் தன்னிடம் பேரம் பேசியதாக குற்றம் சாட்டியிருந்தாா்.

மேலும், சில நாள்களுக்கு முன்பு அவா் காரில் சென்று கொண்டிருந்தபோது லாரியை வைத்து மா்ம நபா் மோத முயற்சித்ததாகவும் தெரிவித்தாா். இதுதொடா்பாக உளவுத்துறையினா் அவரிடம் நேரில் விசாரணை நடத்தினா்.

இதைத் தொடா்ந்து தமிழ்நாடு காவல்துறை சாா்பில் அவருக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. 24 மணி நேரத்திற்கு ஒருவா் என சுழற்சி முறையில் போலீஸாா் பணியில் இருப்பா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.