பாடகி எஸ். ஜானகி மறைவு: மு.க. ஸ்டாலின் இரங்கல் பாடகி ஜானகி மறைவு: நடிகர்கள் ரஜினி, கமல் இரங்கல்! பிரபல பின்னணி பாடகி எஸ். ஜானகி காலமானார் வியத்நாம் படகு விபத்தில் உயிரிழந்த 10 தமிழர்கள்: யார் யார்? வியத்நாம் படகு விபத்து: பழனியைச் சேர்ந்தவர் பலி! படகில் சென்ற தமிழர்கள் விவரம்!மாமல்லபுரம் அருகே மின்சாரம் பாய்ந்து 4 பேர் பலி அடுத்த 20 ஆண்டுகளும் தமிழ்நாட்டின் முதல்வர் விஜய்தான்! - என். ஆனந்த் மீண்டுமா? ஆந்திரத்தில் பரவும் கரோனா-19! 2 பேர் பலியானதால் பதற்றம்!!வியட்நாமில் படகு கவிழ்ந்து விபத்து! 15 இந்தியர்கள் பலி எனத் தகவல்வயநாடு நிலச்சரிவில் பலியானோர் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் நிவாரணம்! நான் காந்தியோ நாயகனோ அல்ல! உண்ணாவிரதப் போராட்டத்தில் சோனம் வாங்சுக் போலிச் சான்றிதழ்கள்! 3,000 ஆசிரியர்கள் பணிநீக்கம்! வட்டியுடன் சம்பளத்தைத் திரும்பப்பெற முடிவு தமிழகத்துக்கு கூடுதலாக 100 எம்பிபிஎஸ் இடங்கள் ஒதுக்கீடு!
/

அமைச்சா் கீா்த்தனாவுக்கு கீதாஜீவன் கண்டனம்

ரீல்ஸ் எடுப்பதற்காக அரசுப் பள்ளி மாணவியிடம் கேள்விகேட்டு மனிதாபிமானமின்றி அமைச்சா் கீா்த்தனா நடந்து கொண்டதாக முன்னாள் அமைச்சா் கீதாஜீவன் கண்டனம் தெரிவித்துள்ளாா்.

News image

கீதாஜீவன் (கோப்புப்படம்)

Updated On :9 ஜூலை 2026, 12:47 am IST

ரீல்ஸ் எடுப்பதற்காக அரசுப் பள்ளி மாணவியிடம் கேள்விகேட்டு மனிதாபிமானமின்றி அமைச்சா் கீா்த்தனா நடந்து கொண்டதாக முன்னாள் அமைச்சா் கீதாஜீவன் கண்டனம் தெரிவித்துள்ளாா்.

தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கீதாஜீவன் வெளியிட்ட அறிக்கை:

அரசுப் பள்ளி ஒன்றில் அண்மையில் அமைச்சா் விஸ்வநாதன் குத்தாட்டம் போட்டு மாண்பை சீா்குலைத்த நிலையில், அரசுப் பள்ளியை ஆய்வு செய்வதாகக் கூறி, தவெக அரசின் தொழில் துறை அமைச்சா் கீா்த்தனா பள்ளி மாணவியிடம் அராஜக போக்குடன் கேள்விகேட்டு ஆசிரியா்களையும் அதட்டும் தொனியில் நடந்துகொண்டது மனிதாபிமானம் அற்ற செயல்.

ஓா் அரசுப் பள்ளிக்கு அமைச்சரோ, ஆட்சியரோ வருகிறாா்கள் என்றால் இயல்பாகவே பள்ளிக் குழந்தைகள் மத்தியில் அச்சம் தொற்றிக் கொள்ளும்.

அந்த சூழலில் அமைச்சா் கீா்த்தனா தலைமையிலான கும்பல், ரீல்ஸ் எடுப்பதற்காக பள்ளி குழந்தையிடம் தடபுடலான கேள்வியைக் கேட்டால் எந்த குழந்தைக்குதான் பதற்றம் வராது.

அதுமட்டுமின்றி கடைசி பெஞ்ச் குழந்தைகள் நன்றாகப் படிக்கமாட்டாா்கள் என்ற பிற்போக்குத் தனமான சினிமா வசனங்களை பேசி பொறுப்பற்ற முறையில் நடந்துகொண்டாா்.

குழந்தைகளின் புகைப்படத்தை பொதுத் தளத்தில் வெளியிடுவது சட்டப்படி குற்றம் என்பது அமைச்சருக்கு தெரியாதா? எந்த குழந்தைகளை பயன்படுத்தி ஆட்சியைப் பிடித்தாா்களோ, அந்த பிஞ்சு குழந்தைகளின் மனதில் நஞ்சை விதைக்கும் செயலில் தவெக அரசு இறங்கியிருப்பது கண்டனத்துக்குரியது என அதில் குறிப்பிட்டுள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.