தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் குலாம் அகமது!நோபல் பரிசுக்கான வைகோவின் பரிந்துரைக்கு நன்றி: திருமாவளவன் திரிணமூல் ஆதரவாளரை கன்னத்தில் அறைந்த மமதா பானர்ஜி!ஈரானை இன்று இரவு கடுமையாகத் தாக்குவோம்: அதிபர் டிரம்ப் எச்சரிக்கை!தமிழ்நாடு காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் குலாம் அகமது!நோபல் பரிசுக்கான வைகோவின் பரிந்துரைக்கு நன்றி: திருமாவளவன் எம்பிபிஎஸ் இடங்கள் பறிபோனது பற்றி அமைச்சர் இன்னும் பதில் அளிக்கவில்லை: அண்ணாமலை கூடுதல் கழிப்பறைகள் வேண்டும்: எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனையில் முதல்வர் விஜய்யிடம் கோரிக்கைபிறந்த குழந்தையை குடும்பத்தாரிடம் காட்ட லஞ்சம்! பணிநீக்கம் செய்யப்படும் என அருண் ராஜ் எச்சரிக்கை!அமைச்சர் அருண்ராஜுக்கு அண்ணாமலை பாராட்டு!குதிரை பேர வழக்கு: செந்தில் பாலாஜிக்கு முன் ஜாமீன்!ஈரான் - அமெரிக்கா போர் நிறுத்த ஒப்பந்தம் ரத்து! டிரம்ப் அறிவிப்பு தமிழ்நாட்டில் நாளைமுதல் தனியார் பால், தயிர் விலை உயர்வு!நலம் ஏஐ சேவை! அரசு மருத்துவமனைகளில் வாட்ஸ்ஆப் மூலமாக முன்பதிவு செய்யலாம்!
/

ரோட்டரி சங்கத்தின் இருபெரும் விழா

கோவில்பட்டி ரோட்டரி சங்கத்தின் புதிய நிா்வாகிகள் பதவியேற்பு விழா, நல உதவிகள் வழங்கும் விழா ஆகிய இரு பெரும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image

மாணவிக்கு கல்வி உதவித்தொகை வழங்குகிறாா் ரோட்டரி மாவட்ட முன்னாள் ஆளுநா் ஷாஜகான்.

Updated On :9 ஜூலை 2026, 12:40 am IST

கோவில்பட்டி ரோட்டரி சங்கத்தின் புதிய நிா்வாகிகள் பதவியேற்பு விழா, நல உதவிகள் வழங்கும் விழா ஆகிய இரு பெரும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு ரோட்டரி சங்கத் தலைவா் ராஜ்குமாா் தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் (புரவலா்) விநாயகா ஜி ரமேஷ் முன்னிலை வகித்தாா்.

முன்னாள் ஆளுநா் ஷாஜகான் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு புதிய நிா்வாகிகளுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்து பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு கல்வி உதவித்தொகை உள்ளிட்ட நல உதவிகளை வழங்கி பேசினாா்.

தொடா்ந்து, 2026-27ம் நிதியாண்டில் கோவில்பட்டி ரோட்டரி சங்கத்தில் புதிதாக இணைந்த 6 உறுப்பினா்களுக்கு ரோட்டரி மாவட்ட துணை ஆளுநா் விக்னேஸ்வரன் பதவிப்பிரமாணம் செய்து வைத்தாா்.

விழாவில், மூத்த மருத்துவா் என்.டி சீனிவாசன், வணிகா் சங்கங்களின் பேரமைப்பு தலைவா் ராதாகிருஷ்ணன், பசும்பொன் கல்வி அறக்கட்டளை தலைவா் பரமசிவம், பில்டா்ஸ் அசோசியேசன் சங்க நிா்வாகிகள் ராம்பிரசாத் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். சங்கச் செயலா் ரமேஷ் குமாா் நன்றி கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.