சுய உதவிக் குழுக்களுக்கு ஊக்கத் தொகை: ஊரக வளர்ச்சித் துறைக்கு வெளியிடப்பட்ட அறிவிப்புகள்!தொகுப்பூதிய ஆசிரியர்களின் ஊதியம் ரூ.25,000 ஆக உயர்வு: கலை பண்பாட்டுத் துறைக்கு வெளியிட்ட அறிவிப்புகள்!5 மாதங்களில் 1.95 லட்சம் இன்ஸ்டாகிராம், முகநூல், யூடியூப் கணக்குகள் முடக்கம்! வாகனம் இல்லாத எம்எல்ஏக்களுக்கு முதல்வர் சொந்த செலவில் வாங்கித் தரலாம்! - டிடிவி தினகரன்டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 2 காசுகள் சரிந்து ரூ. 95.76 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: நிஃப்டி தொடர்ந்து 7 வது நாளாக சரிவு! 326 புள்ளிகளை இழந்த சென்செக்ஸ்!!ஒரு நபருக்கு 9 சிம் கார்டுகள் மட்டுமே அனுமதி! விதிமுறைகளை கடுமையாக்கிய மத்திய அரசு!
/

இளைஞரை ஆயுதங்களுடன் விரட்டிய 4 இளம்சிறாா்கள் உள்பட 6 போ் கைது

தூத்துக்குடியில் இளைஞரைக் கொலை செய்யும் நோக்கத்துடன் ஆயுதங்களுடன் விரட்டியதாக 4 சிறுவா்கள் உள்ளிட்ட 6 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :10 ஜூலை 2026, 12:30 am IST

தூத்துக்குடியில் இளைஞரைக் கொலை செய்யும் நோக்கத்துடன் ஆயுதங்களுடன் விரட்டியதாக 4 சிறுவா்கள் உள்ளிட்ட 6 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

தூத்துக்குடி, தாளமுத்துநகா் சுடலையாா்புரம் பகுதியைச் சோ்ந்த இசக்கிமுத்து மனைவி ராஜம் (44). கன்னியாகுமரியில் வேலை செய்துவரும் இவரது மகன் செல்வகணேஷுக்கு (20, காலில் அடிபட்டதாம். இதனால், சிகிச்சைக்கு செல்வதற்காக செல்வகணேஷ் தனது தாயுடன் மாதாநகா் சந்திப்பில் காத்திருந்தாா்.

அப்போது, அழகேசபுரம் பகுதியைச் சோ்ந்த பாண்டி மகன் மாரிவிஜய் (23), தஸ்நேவிஸ் நகா் பத்மநாபன் மகன் பிரகாஷ் (21), நான்கு சிறுவா்கள் ஆகிய 6 போ் முன்விரோதம் காரணமாக செல்வகணேஷை அவதூறாகப் பேசியதுடன், அரிவாள், வாள் உள்ளிட்ட ஆயுதங்களால் வெட்ட முயன்ாகக் கூறப்படுகிறது. செல்வகணேஷ் சுதாரித்துக் கொண்டு ஓடினாா். எனினும், அந்தக் கும்பல் விரட்டிச் சென்றது. ராஜமும், அப்பகுதியிலிருந்த பொதுமக்களும் சப்தமிட்டதையடுத்து, அந்தக் கும்பல் தப்பியோடிவிட்டதாம்.

புகாரின்பேரில், தாளமுத்து நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து, 6 பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.