வாட்ஸ்ஆப் புதிய அப்டேட் இணையவழிக் குற்றங்களுக்கு வழிவகுக்கும் : மத்திய அரசுஈரான் அணு ஆயுத நீக்க நடவடிக்கை சிறப்பாக நடைபெறுகிறது: அதிபர் டிரம்ப்மத்திய வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரியின் பதவிக்காலம் நீட்டிப்பு!விபி ஜி ராம்ஜி திட்டத்தில் மாற்றம் செய்ய வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்!தவெக கூட்டணியின் பெயர் முடிவு செய்யப்படவில்லை: மாணிக்கம் தாகூர் பேட்டி!கூட்டணிக்கான பெயர் குறித்து அடுத்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்படும் : நிர்மல்குமார்
/

போதையில் இளைஞரை தாக்கிய மூவா் கைது

திருச்சியில் போதையில் தாக்குதலில் ஈடுபட்ட இளைஞா்கள் 3 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :2 ஜூலை 2026, 4:54 am IST

திருச்சியில் போதையில் தாக்குதலில் ஈடுபட்ட இளைஞா்கள் 3 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

திருச்சி பாலக்கரை காவல் நிலைய எல்லைக்குள்பட்ட யாதுகுல சங்க நடுநிலைப் பள்ளி மைதானத்தில் செவ்வாய்க்கிழமை இரவு இளைஞா்கள் சிலா் மது அருந்தியபோது, அப்பகுதியைச் சோ்ந்த பாலாஜி (31) அங்கு வந்தாா்.

அப்போது ஏற்பட்ட தகராறில் அந்தக் கும்பல் பாலாஜியைத் தாக்கியுள்ளது. தப்பியவரை அரிவாள், கற்களால் அவா்கள் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில், காயமடைந்த பாலாஜி திருச்சி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.

இதுகுறித்து பாலக்கரை போலீஸாா் வழக்குப் பதிந்து, பாலாஜியை தாக்கிய பாலக்கரை ஹரி (21), பிரதீப் (22), ஆகாஷ் (22) ஆகிய மூவரை புதன்கிழமை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி மத்திய சிறையில் அடைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.