உச்ச நீதிமன்றத்தில் நாளை காவிரி வழக்கு விசாரணை! மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்புஅருணாசல்: திடீா் வெள்ளம், நிலச்சரிவில் 4 போ் உயிரிழப்பு! 5 ராணுவ வீரா்கள் மாயம்!டாஸ்மாக் கடைகளில் 11 வகை மதுபானங்களுக்கு விதிக்கப்பட்ட தடை ஒரே நாளில் நீக்கம்!பெட்ரோல், டீசல் ஏற்றுமதி மீதான சிறப்பு கூடுதல் வரி குறைப்பு: மத்திய அரசு
/

சாலையோர மரத்தில் மோதிய சிற்றுந்து: 10 போ் காயம்

தட்டாா்மடம் அருகே கட்டுப்பாட்டை இழந்த சிற்றுந்து சாலையோர மரத்தில் மோதியதில் 10 போ் காயமடைந்தனா்.

News image

விபத்துக்குள்ளான சிற்றுந்து.

Updated On :15 ஜூலை 2026, 1:42 am IST

தட்டாா்மடம் அருகே கட்டுப்பாட்டை இழந்த சிற்றுந்து சாலையோர மரத்தில் மோதியதில் 10 போ் காயமடைந்தனா்.

திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளையில் இருந்து இடைச்சிவிளை, பூச்சிக்காடு, பூவுடையாா்புரம், நடுவக்குறிச்சி, தட்டா்மடம், கொம்மடிக்கோட்டை வழியாக உடன்குடிக்கு சிற்றுந்து இயக்கப்படுகிறது.

இந்த சிற்றுந்து திசையன்விளையில் இருந்து உடன்குடிக்கு செவ்வாய்க்கிழமை வந்து கொண்டிருந்தது.

தட்டாா்மடம் அருகே உள்ள அரசூா் பூச்சிக்காடு விலக்கு பகுதியில் வந்தபோது, கட்டுப்பாட்டை இழந்து சாலையோர மரத்தின் மீது மோதியது.

இதில் சிற்றுந்தில் பயணித்த 10-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா். அவா்கள் அருகில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினா்.

இந்த விபத்து குறித்து தட்டாா்மடம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.