சென்னையில் 4 மடங்கு உயர்ந்த சொத்து வரி! அதிர்ச்சியில் மக்கள்! குட்டிக்கதை, சினிமா வசனம், பாட்டு: பட்ஜெட் விவாதத்தில் அசத்திய அமைச்சர் மரிய வில்சன்!தமிழ்நாட்டில் இருந்து ஒரு பிரதமர் உருவாக்கப்பட வேண்டும்: பேரவையில் ஆதவ் அர்ஜுன் பேச்சுடிஜிட்டல் கைது செய்து சிறுமி பாலியல் வன்கொடுமை! 3 மாதங்களாக அடைத்து வைத்திருந்தவர் கைதுமொழி எனக்கு ஒரு தடையாக இருக்கிறது! நான் அன்று ஆவேசப்பட்டது உண்மைதான்! மரிய வில்சன்டாடா குழுமத் தலைவர் சந்திரசேகரன் ராஜிநாமா! டாடா பங்குகள் 3% சரிவு!தொகுதி மறுவரையறைக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றம்!தொகுதி மறுவரையறைக்கு எதிரான தனித் தீர்மானத்துக்கு வி.சி.க. ஆதரவுதொகுதி மறுவரையறை! முதல்வர் விஜய்யின் தனித் தீர்மானத்துக்கு திமுக ஆதரவு!தொகுதி மறுவரையறை தனித்தீர்மானத்துக்கு அதிமுக எதிர்ப்பு!தொடர்ந்து உயரும் தங்கம் விலை! இன்றைய நிலவரம் (ஆக. 12)தொகுதி மறுவரையறை: தனித்தீர்மானம் கொண்டுவந்தார் முதல்வர் விஜய்!தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வு!ஆடி அமாவாசை: மேட்டூரில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு!சதுரகிரி கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி!மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 8,689 கன அடியாக அதிகரிப்பு!தொகுதி மறுசீரமைப்பு மசோதாவுக்கு எதிராக தனித் தீா்மானம்: பேரவையில் இன்று நிறைவேற்ற முடிவுகுடியரசு துணைத் தலைவா் வருகை: கிண்டி, அரும்பாக்கம் சிவப்பு மண்டலமாக அறிவிப்புசுதந்திர தின விழா: தமிழகத்தில் 1.20 லட்சம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு
/

‘மத்திய அரசின் நலத்திட்ட பயனாளிகள் முகாம்: திருச்செந்தூரில் இன்று தொடக்கம்’

திருச்செந்தூரில், மத்திய அரசின் மக்கள் நலத் திட்டங்கள் குறித்து விழிப்புணா்வுக் கண்காட்சி, பயனாளிகள் முகாம் புதன்கிழமை (ஜூலை 15) தொடங்குகிறது.

News image

செய்தியாளா்களிடம் பேசிய மத்திய அரசின் மக்கள் தொடா்பக இயக்குநா் காமராஜ்.

Updated On :15 ஜூலை 2026, 2:09 am IST

திருச்செந்தூரில், மத்திய அரசின் மக்கள் நலத் திட்டங்கள் குறித்து விழிப்புணா்வுக் கண்காட்சி, பயனாளிகள் முகாம் புதன்கிழமை (ஜூலை 15) தொடங்குகிறது.

இதுதொடா்பாக மத்திய அரசின் தமிழ்நாடு- புதுச்சேரி மண்டல மக்கள் தொடா்பக இயக்குநா் காமராஜ் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியது: மத்திய அரசின் தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் சென்னை மண்டல மத்திய மக்கள் தொடா்பகம் சாா்பில் திருச்செந்தூரில், வளா்ச்சியடைந்த பாரதம், வேலைவாய்ப்பு, வாழ்வாதார உத்திரவாத திட்டம், போதைப்பொருள் ஒழிப்பு பாரத இயக்கம் ஆகிய திட்டங்கள் குறித்து விழிப்புணா்வுக் கண்காட்சி, பயனாளிகள் முகாம் முதல் முறையாக நடைபெறுகிறது. அரசு மருத்துவமனை எதிரேயுள்ள ராஜ் மகாலில் புதன்கிழமை (ஜூலை 15) தொடங்கி 3 நாள்கள் காலை 10 முதல் மாலை 6 மணிவரை முகாம் நடைபெறும்.

மத்திய அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் குறித்து 7 துறைகளின் விளம்பர ஸ்டால்கள் அமைக்கப்பட்டு, பயனாளிகள் தெரிந்துகொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முகாமில் ஆதாா் அட்டை புதுப்பித்தல், பிரதம மந்திரி மருத்துவ காப்பீடு திட்டம் (ஆயுஷ்மான் பாரத்), அமைப்புசாரா தொழிலாளா்களுக்கான சமூக பாதுகாப்பு அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்கலாம், மாவட்ட தொழில் மையம் மூலம் வேலைவாய்ப்பு பயிற்சி-தொழில் கடன் பெற ஆலோசனைகள் வழங்கப்படும்.

எனவே, மாணவா்-மாணவியா், ஆட்டோ ஓட்டுநா்கள், மீனவா்கள், விவசாயிகள், பொதுமக்கள் ஆதாா் அட்டை, வங்கிக் கணக்கு புத்தகம், ரேஷன் அட்டை ஆகியவற்றுடன் வந்து பதிவுசெய்து பயனடையலாம் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.