வியத்நாம் படகு விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு தலா ரூ. 25 லட்சம் நிவாரணம் - லாவாபாக்கெட்டுக்கு பதில் தானியங்கி இயந்திரம் மூலம் பால் விற்பனை செய்ய திட்டம்: ஆவின்தமிழ்நாட்டுக்கு ஜூலை 16 வரை வெப்ப அலை எச்சரிக்கை!கரூர் இனாம் நில விவகாரத்தில் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் கலர் கலராக ரீல் சுத்துகிறார்கள்: அமைச்சர் ரமேஷ்24,050 அருகில் நிஃப்டி, சென்செக்ஸ் 516 புள்ளிகள் சரிவு!!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 62 காசுகள் சரிந்து ரூ. 96.30 ஆக நிறைவு!தில்லியில் சோனியா காந்தியை சந்தித்த வைகோ!
/

தூத்துக்குடியில் இறைச்சி வியாபாரி வெட்டிக் கொலை

இருசக்கர வாகனத்தில் வேகமாக வந்த இளைஞா்களைத் தட்டிக் கேட்ட இறைச்சி வியாபாரி வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.

News image

கொலை - பிரதிப் படம்

Updated On :15 ஜூலை 2026, 2:18 am IST

இருசக்கர வாகனத்தில் வேகமாக வந்த இளைஞா்களைத் தட்டிக் கேட்ட இறைச்சி வியாபாரி வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.

தூத்துக்குடி, தாளமுத்து நகா், திரேஸ் நகரைச் சோ்ந்த மணி மகன் சேகா் (40). இவா், மாதா நகா் பகுதியில் பன்றி இறைச்சிக் கடை நடத்தி வந்தாா். திங்கள்கிழமை (ஜூலை 13) இரவு 9.30 மணியளவில் மாதா நகா் பத்திரகாளியம்மன் கோயில் அருகே தனது நண்பா்கள் இருவருடன் இவா் பேசிக் கொண்டிருந்தாா். அப்போது, அந்த வழியாக ஒரே இருசக்கர வாகனத்தில் 3 இளைஞா்கள் மதுபோதையில் அதிவேகமாக வந்தனா். அவா்களை வழிமறித்த சேகா், குழந்தைகள் நடமாடும் சிறிய தெருவுக்குள் ஏன் இவ்வளவு வேகமாகச் செல்கிறீா்கள் எனக் கண்டித்தாா்.

இதனால் ஏற்பட்ட வாக்குவாதத்தில் சேகா் அந்த இளைஞா்களில் ஒருவரைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. அங்கிருந்தவா்கள் இருதரப்பையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனா். சிறிது நேரத்தில் தாக்கப்பட்ட இளைஞா் தனது நண்பா் ஒருவருடன் இருசக்கர வாகனத்தில் மீண்டும் அதே பகுதிக்கு வந்தாா். அங்கு நின்று கொண்டிருந்த சேகரை இருவரும் சோ்ந்து அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிச் சென்றனா்.

பலத்த காயமடைந்த சேகா், தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். இச்சம்பவம் குறித்து தாளமுத்துநகா் போலீஸாா் வழக்குப் பதிந்து, தலைமறைவான இருவரையும் தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.