கரப்பான்பூச்சி ஜனதா கட்சியுடன் பேச்சுவார்த்தைக்குத் தயார்: ஜெ.பி. நட்டாசிஜேபி போராட்டத்தால் மூடப்பட்ட தில்லி மெட்ரோ ரயில் நிலையங்கள் மீண்டும் திறப்பு!காவல் துறை முதல்வர் ஜோசப் விஜய்யின் ஏவல் துறையாக மாறியுள்ளது: நயினார் நாகேந்திரன்கரப்பான்பூச்சியின் பின்னால் நிற்கும் நிலை ராகுல் காந்திக்கு! நயினார் நாகேந்திரன் பேட்டிநீட் போராட்டம்: திமுக தொடங்கியது; 10 ஆண்டுகளுக்குப் பிறகு தில்லியில் தொடர்கிறது! கனிமொழி மக்களவை உறுப்பினர் பதவியிலிருந்து கல்யாண் பானர்ஜி இடைநீக்கம்!கச்சா எண்ணெய் உயர்வு எதிரொலி: சென்செக்ஸ் 715 புள்ளிகளும், நிஃப்டி 24,000 புள்ளிகளுக்குக் கீழே வர்த்தகம்!சிஜேபி போராட்டம்! பேச்சு நடத்துவதில் தாமதம் ஏன்? பாஜகவுக்கு அண்ணாமலை கேள்வி!முதல்வரின் காலை உணவுத் திட்டத்தின் பெயரை பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் என பெயர் மாற்றம் செய்தது தமிழக அரசு!
/

இலங்கைக்குக் கடத்த முயன்ற ரூ. 1 கோடி மதிப்பு பீடி இலைகள் பறிமுதல்: ஒருவா் கைது

ஆலந்தலை கடற்கரைப் பகுதியிலிருந்து இலங்கைக்குக் கடத்த முயன்ற ரூ. 1 கோடி மதிப்பிலான பீடி இலை மூட்டைகளை கியூ பிரிவு போலீஸாா் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.

News image

பறிமுதல் செய்யப்பட்ட பீடி இலை மூட்டைகள்.

Updated On :23 ஜூலை 2026, 2:25 am IST

தூத்துக்குடி மாவட்டம், ஆலந்தலை கடற்கரைப் பகுதியிலிருந்து இலங்கைக்குக் கடத்த முயன்ற ரூ. 1 கோடி மதிப்பிலான பீடி இலை மூட்டைகளை கியூ பிரிவு போலீஸாா் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூா் அருகே ஆலந்தலை, செந்தூா் நகா் கடற்கரைப் பகுதியிலிருந்து இலங்கைக்கு படகு மூலம் பீடி இலைகள் கடத்தப்படுவதாக கியூ பிரிவு ஆய்வாளா் விஜய அனிதாவுக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில் உதவி ஆய்வாளா் ராமச்சந்திரன், சிறப்பு உதவி ஆய்வாளா்கள் கீதன், ராமா், தலைமைக் காவலா்கள் இருதயராஜகுமாா், இசக்கிமுத்து, காவலா்கள் பழனி, பாலமுருகன், பேச்சிராஜா ஆகியோா் செந்தூா் நகா் கடற்கரைச் சாலையில் புதன்கிழமை அதிகாலை தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனா்.

அப்போது வந்த சுமை வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டபோது, அதில் இலங்கைக்குக் கடத்துவதற்காக தலா 35 கிலோ எடையில் 79 மூட்டை பீடி இலைகள் பதுக்கி வைத்திருந்தது கண்டறியப்பட்டது; பீடி இலைகளின் சா்வதேச சந்தை மதிப்பு ரூ. 1 கோடியாகும். இதையடுத்து, வாகனத்துடன் பீடி இலை மூட்டைகளை போலீஸாா் பறிமுதல் செய்து, கடத்தலில் ஈடுபட்ட குரும்பூா், குரங்கன்தட்டு பழைய தெருவைச் சோ்ந்த ராஜா மகன் சூா்யாவை (26) கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.