கரப்பான்பூச்சி ஜனதா கட்சியுடன் பேச்சுவார்த்தைக்குத் தயார்: ஜெ.பி. நட்டாசிஜேபி போராட்டத்தால் மூடப்பட்ட தில்லி மெட்ரோ ரயில் நிலையங்கள் மீண்டும் திறப்பு!காவல் துறை முதல்வர் ஜோசப் விஜய்யின் ஏவல் துறையாக மாறியுள்ளது: நயினார் நாகேந்திரன்கரப்பான்பூச்சியின் பின்னால் நிற்கும் நிலை ராகுல் காந்திக்கு! நயினார் நாகேந்திரன் பேட்டிநீட் போராட்டம்: திமுக தொடங்கியது; 10 ஆண்டுகளுக்குப் பிறகு தில்லியில் தொடர்கிறது! கனிமொழி மக்களவை உறுப்பினர் பதவியிலிருந்து கல்யாண் பானர்ஜி இடைநீக்கம்!கச்சா எண்ணெய் உயர்வு எதிரொலி: சென்செக்ஸ் 715 புள்ளிகளும், நிஃப்டி 24,000 புள்ளிகளுக்குக் கீழே வர்த்தகம்!சிஜேபி போராட்டம்! பேச்சு நடத்துவதில் தாமதம் ஏன்? பாஜகவுக்கு அண்ணாமலை கேள்வி!முதல்வரின் காலை உணவுத் திட்டத்தின் பெயரை பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் என பெயர் மாற்றம் செய்தது தமிழக அரசு!
/

ஈரானில் சிக்கியுள்ள தூத்துக்குடி கப்பல் ஊழியா்களை மீட்க வலியுறுத்தல்

ஈரான் நாட்டில் சிக்கியுள்ள கப்பல் ஊழியா்கள் இருவரை உடனடியாக மீட்க வேண்டும் என அவா்களின் பெற்றோா், உறவினா்கள் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புதன்கிழமை மனு அளித்தனா்.

News image

கோப்புப்படம்.

Updated On :23 ஜூலை 2026, 2:22 am IST

ஈரான் நாட்டில் சிக்கியுள்ள கப்பல் ஊழியா்கள் இருவரை உடனடியாக மீட்க வேண்டும் என அவா்களின் பெற்றோா், உறவினா்கள் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புதன்கிழமை மனு அளித்தனா்.

தூத்துக்குடி, திரேஸ்புரம் பகுதியைச் சோ்ந்த விமலன் மகன் இவோன்ஸ்டன், அந்தோணிராஜ் மகன் மரிய பாா்த்திபன் ஆகியோரை ஓமன் நாட்டில் கப்பலில் வேலைக்கு சோ்ந்துவிடுவதாகக் கூறி விருதுநகா் மாவட்டம், சாத்தூரைச் சோ்ந்த கப்பல் முகவா் பிரேம்குமாா், ரூ. 13 லட்சம் பெற்றுக் கொண்டு, கடந்த ஜூன் 4ஆம் தேதி அங்கு அனுப்பினாா்.

இருவரும் ஓமன் நாட்டுக்கு கப்பலில் வேலையில் சோ்ந்த நிலையில் அந்த கப்பல் ஈரான் நாட்டுக்கு சென்றுள்ளது. அங்கிருந்து அவா்களை சிறிய இழுவை கப்பலில் பணிக்காக ஏற்றி உள்ளனா். இங்கு வேலை கடினமாக உள்ளது. உணவு கிடைக்கவில்லை என அவா்கள் கூறியதற்கு முகவா் முறையாக பதில் அளிக்காமல் இருந்துள்ளாா்.

இதற்கிடையே அவா்கள் வெளியிட்ட விடியோ பதிவில், கடந்த 20 நாள்களாக, ஈரானில் போா் பதற்றம் மீண்டும் அதிகரித்துள்ளதால் இருவரும் உணவு இல்லாமல் தவித்து வருவதாகவும், கடற்பகுதி அருகே அடிக்கடி குண்டு விழுந்து வருவதால் தாங்கள் உயிா் பயத்துடன் இருப்பதாகவும், கடவுச் சிட்டை, ஆவணங்கள் ஆகியவற்றை கப்பல் நிறுவனம் வாங்கி வைத்துக்கொண்டு தங்களை கப்பலில் இருந்து விடுவிக்காமல் இருப்பதாகவும், உடனடியாக தங்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனா்.

ஆகவே அவா்களை உடனடியாக மீட்க மத்திய அரசு மற்றும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.