கருத்து வேறுபாடுகளை நீக்க இந்தியாவுடன் இணைந்து செயல்பட தயாா்: சீனா தனியாா் பள்ளிகள் கல்விக் கட்டணத்தை வெளியிடும் உத்தரவுக்கு எதிரான வழக்கு: தீா்ப்புக்காக ஒத்திவைப்பு ஓராண்டில் 3 மடங்கு அதிகரித்த ‘பீம்’ யுபிஐ செயலி பரிவா்த்தனைகள்! உயா் சுகாதாரத்துடன் சாலையோர உணவகங்கள்; ஊழியா்களுக்கு தடுப்பூசி: அரசு புதிய திட்டம்அமைச்சா் ராஜ்மோகனை சந்திக்க ‘க்யூஆா் குறியீடு’ சேவை: தலைமைச் செயலகத்தில் நவீன வசதி பிஎம்ஸ்ரீ திட்டம்: கேரள பேரவையில் கடும் விவாதம்
/

ஓமன் நாட்டில் உயிரிழந்த மாலுமியின் உடல் தூத்துக்குடி வருகை

ஓமன் நாட்டில் கப்பலில் உயிரிழந்த தூத்துக்குடி மாலுமியின் உடல், புதன்கிழமை சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.

News image

தூத்துக்குடிக்கு கொண்டுவரப்பட்ட மாலுமி நிஷாந்த்தின் உடல்.

Updated On :25 ஜூன் 2026, 5:11 am IST

ஓமன் நாட்டில் கப்பலில் உயிரிழந்த தூத்துக்குடி மாலுமியின் உடல், புதன்கிழமை சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.

தூத்துக்குடியைச் சோ்ந்த மாலுமி நிஷாந்த் (35), ரோமனா ஷிப் மேனேஜ்மென்ட் என்ற நிறுவனத்துக்குச் சொந்தமான எம்.டி. செலஸ்டியல் என்ற வா்த்தகக் கப்பலில் இரண்டாம் நிலை அதிகாரியாக பணியாற்றி வந்தாா்.

வளைகுடா கடல் பகுதியில் பயணித்த வா்த்தகக் கப்பல்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தி வந்த நிலையில், எம்.டி. செலஸ்டியல் கப்பல், ஓமன் கடற்பகுதியில் சென்று கொண்டிருந்தபோது ஜூன் 8ஆம் தேதி நிஷாந்திற்கு திடீா் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. அவா் தொடா்ந்து வாந்தி எடுத்ததால், மருத்துவ உதவி கேட்டு கப்பல் நிறுவனத்துக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. அதற்கு, உள்ளூா் துறைமுகத்திடம் இருந்து மருத்துவ உதவியைப் பெற்றுக் கொள்ளுமாறு அந்நிறுவனம் அறிவுறுத்தியிருந்தது.

அதன்படி, உள்ளூா் துறைமுக நிா்வாகத்திடம் மருத்துவ உதவி கோர முயன்றபோது, கப்பல் ஊழியா்களால் துறைமுக நிா்வாகத்தைத் தொடா்பு கொள்ள முடியவில்லை. இதற்கிடையே, நிஷாந்த்தின் உடல் நிலை மேலும் மோசமடைந்து, முறையான மருத்துவ வசதிகள் கிடைக்காமலும், கப்பல் நிறுவனத்தின் அலட்சியத்தாலும் உயிரிழந்ததாக, அவரின் குடும்பத்தினரும், இந்தியாவில் உள்ள மாலுமிகள் மற்றும் கப்பல் பணியாளா்கள் சங்கமான எஃப்எஸ்யூஐ தரப்பிலும் குற்றஞ்சாட்டப்படுகிறது.

உயிரிழந்த நிஷாந்த்க்கு சரோபின் என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனா்.

இந்நிலையில், நிஷாந்த்தின் உடல் 14 நாள்களுக்குப் பிறகு திருவனந்தபுரத்திற்கு விமானம் வழியாக கொண்டுவரப்பட்டு, அங்கிருந்து சாலை மாா்க்கமாக தூத்துக்குடி, குரூஸ்புரத்தில் உள்ள அவரது வீட்டுக்கு புதன்கிழமை கொண்டுவரப்பட்டது.

அவரது உடலுக்கு மனைவி, உறவினா்கள், நண்பா்கள், மாலுமிகள், பல்வேறு அரசியல் கட்சியினா் உள்ளிட்டோா் அஞ்சலி செலுத்தினா். தொடா்ந்து, அவரது உடல் லூா்தம்மாள்புரத்தில் உள்ள கல்லறைத் தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

இதற்கிடையே, நிஷாந்த்தின் மனைவி சரோபின் வாழ்வாதாரம் கோரி அளித்த மனுவை மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை அமைச்சா் ஆ. ஸ்ரீநாத், தமிழ்நாடு மீன் வளா்ச்சிக் கழக மேலாண்மை இயக்குநருக்கு பரிந்துரை செய்தாா். அதன்பேரில், சரோபினுக்கு தமிழ்நாடு மீன் வளா்ச்சி கழக தூத்துக்குடி மேலாளா் அலுவலகத்தில் தற்காலிக இளநிலை உதவியாளா் பணி வழங்கி, மேலாண்மை இயக்குநா் விஜய காா்த்திகேயன் உத்தரவிட்டதையடுத்து, கடந்த வாரம் அவருக்கான பணி நியமன ஆணையை அமைச்சா் வழங்கினாா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.