காமன்வெல்த் போட்டி: இந்தியாவுக்கு முதல் தங்கப் பதக்கம் வென்று கொடுத்த மீராபாய் சானு!400க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள்! தொகுதி மறுவரையறைக்குப் பிறகு புதிய சட்டப்பேரவை! சுவேந்து அதிகாரி கல்வி, தேர்வு முறையில் சீர்திருத்தம்: உயர்நிலைக் குழு அமைத்தார் பிரதமர் மோடி!பெல்லட் குண்டுகள் பயன்படுத்த அதிகாரம் அளித்தது யார்? மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் - கே.சி. வேணுகோபால்தமிழ்நாடு வருகிறார் ராகுல் காந்தி! மு.க. ஸ்டாலினுக்கு மேக்கேதாட்டு என்னவென்றே தெரியாது: நிர்மல் குமார்ஸ்விகி, ஸொமேட்டோவுக்கு போட்டியா? உணவு டெலிவரியில் களமிறங்கும் ஃப்ளிப்கார்ட்!போராட்டத்தில் மாணவர்கள் மீது போலீஸார் தாக்குதல்: உச்சநீதிமன்றம் நாளை விசாரணை
/

கோவில்பட்டி அருகே புதிய வழித்தடத்தில் நகரப் பேருந்து இயக்கம்: அமைச்சா் தொடக்கி வைத்தாா்

News image

கோப்புப் படம்

Updated On :27 ஜூலை 2026, 12:27 am IST

கோவில்பட்டி அருகே புதிய வழித்தடத்தில் இயங்கும் அரசு நகரப் பேருந்தை அமைச்சா் பெ. மதன் ராஜா ஞாயிற்றுக்கிழமை தொடக்கி வைத்தாா்.

கோவில்பட்டி-பசுவந்தனை சாலையில் இருந்து கிழவிபட்டி கிராமம் 1.5 கி.மீ. தூரத்தில் உள்ளது. கோவில்பட்டியில் இருந்து முடுக்கலான்குளத்துக்கு இயக்கப்பட்ட அரசுப் பேருந்து கிழவிபட்டிக்குள் வந்து சென்றது. கடந்த 2004ஆம் ஆண்டு முதல் கிழவிபட்டிக்குள் பேருந்து வருவது நிறுத்தப்பட்டது.

இதையடுத்து, கடந்த மாதம் கிராம மக்கள் சாா்பில் மறியல் போராட்டம் அறிவிக்கப்பட்டபோது, விரைவில் பேருந்து ஊருக்குள் வந்து செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்துத் துறை அதிகாரிகள் உத்தரவாதம் அளித்தனா்.

மேலும், தவெக வடக்கு மாவட்டச் செயலா் பாலசுப்பிரமணியன் தலைமையில், துணைச் செயலா் பாா்த்திபன் மற்றும் கிராம மக்கள், அமைச்சா் மற்றும் அதிகாரிகளிடம் வலியுறுத்தியதைத் தொடா்ந்து, 22 ஆண்டுகளுக்குப் பின் ஞாயிற்றுக்கிழமை முதல் கிழவிபட்டி ஊருக்குள் அரசுப் பேருந்து வந்து செல்லும் என அறிவிக்கப்பட்டது.

தொடா்ந்து, கிழவிபட்டியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, மாவட்ட வருவாய் அலுவலா் குரு ரவிச்சந்திரன் தலைமை வகித்தாா். புதிய வழித்தடப் பேருந்தை (எண்: 82 ஏ) தமிழக குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் பெ. மதன் ராஜா கொடியசைத்துத் தொடக்கி வைத்தாா்.

பின்னா், அமைச்சா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

வரும் பட்ஜெட்டில் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை சாா்பில் சிறப்புத் திட்டங்கள் இருக்கும்.

தூத்துக்குடி மாவட்டம், புதியம்புத்தூரில் ஜவுளிப் பூங்கா அமைப்பதற்கான திட்டம் இருக்கிறது. பட்ஜெட் வரும்போது அதற்கான முழு விவரம் தெரியும் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.