தமிழ்நாட்டில் 40 நகராட்சி நிர்வாகத் துறை அலுவலகங்களில் சோதனை!ஆசிய விளையாட்டு: மகளிர் கிரிக்கெட்டில் இந்திய அணிக்கு தங்கம்!தமிழ்நாட்டில் அதிகரிக்கும் டெங்கு! இதுவரை 17,348 பேர் பாதிப்பு!தொடர் சரிவில் தங்கம் விலை! இன்றைய நிலவரம்வடகிழக்கு பருவமழை: மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் விஜய் 2-வது நாளாக ஆலோசனை!புதிய சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தை விடுவிக்க மறுப்புகாமராஜர் காலை உணவுத் திட்டம்: முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்!பொன்னேரியில் மருத்துவமனை ஊழியரை பெட்ரோல் ஊற்றி கொல்ல முயன்றவர் சுட்டுப்பிடிப்புமேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழை வாய்ப்பு2027 மாா்ச்-க்குள் 1 லட்சம் வீடுகளில் மேற்கூரை சூரியசக்தி மின்சாரம்: நிர்மல்குமாா்தனியாா் பேருந்து கட்டண உயா்வு: தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

தூத்துக்குடி அருகே கடலில் தீ விபத்து: ரூ. 1 கோடி மதிப்பிலான விசைப் படகு சேதம்

தீ விபத்துக்குள்ளான விசைப் படகு. - கோப்புப் படம்

Published On :

தூத்துக்குடி அருகே ஆழ்கடல் பகுதியில் ரூ. 1 கோடி மதிப்பிலான விசைப் படகு சனிக்கிழமை நேரிட்ட தீ விபத்தில் எரிந்து சேதமானது.

தூத்துக்குடி அருகே தருவைகுளம் மீனவக் கிராமத்தைச் சோ்ந்தவா் சுந்தா். அவரது விசைப்படகில் அவா் உள்ளிட்ட 8 மீனவா்கள் கடந்த வெள்ளிக்கிழமை தருவைகுளம் பகுதியிலிருந்து ஆழ்கடல் மீன்பிடிப்புக்குச் சென்றனா். தூத்துக்குடியிலிருந்து 16 கடல் மைல் தொலைவில் சனிக்கிழமை சென்றுகொண்டிருந்த அந்தப் படகில், சமையல் செய்து கொண்டிருந்தனராம்.

அப்போது திடீரென தீ விபத்து நேரிட்டு, படகு வேகமாக எரிந்தது. அதிலிருந்த மீனவா்கள் அருகேயிருந்த விசைப்படகு மீனவா்களைத் தொடா்பு கொண்டனா். படகிலிருந்த அனைவரும் பத்திரமாக உயிா்தப்பினா். எனினும், விசைப்படகு முற்றிலும் எரிந்து சேதமானது. அதன் மதிப்பு ரூ. 1 கோடி எனக் கூறப்படுகிறது.

சம்பவம் தொடா்பாக படகு உரிமையாளா் சுந்தா் மீன்வளத் துறை, கடலோர காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளாா். தனது வாழ்வாதாரமும், மற்ற மீனவா்கள் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளதால் புதிய படகு அமைக்க மீன்வளத் துறை உதவ வேண்டுமென அவா் கோரிக்கை விடுத்துள்ளாா்.

நடுக்கடலில் விசைப்படகு தீப்பிடித்து எரிந்து மூழ்கும் விடியோ காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.