காமன்வெல்த் போட்டி: இந்தியாவுக்கு முதல் தங்கப் பதக்கம் வென்று கொடுத்த மீராபாய் சானு!400க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள்! தொகுதி மறுவரையறைக்குப் பிறகு புதிய சட்டப்பேரவை! சுவேந்து அதிகாரி கல்வி, தேர்வு முறையில் சீர்திருத்தம்: உயர்நிலைக் குழு அமைத்தார் பிரதமர் மோடி!பெல்லட் குண்டுகள் பயன்படுத்த அதிகாரம் அளித்தது யார்? மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் - கே.சி. வேணுகோபால்தமிழ்நாடு வருகிறார் ராகுல் காந்தி! மு.க. ஸ்டாலினுக்கு மேக்கேதாட்டு என்னவென்றே தெரியாது: நிர்மல் குமார்ஸ்விகி, ஸொமேட்டோவுக்கு போட்டியா? உணவு டெலிவரியில் களமிறங்கும் ஃப்ளிப்கார்ட்!போராட்டத்தில் மாணவர்கள் மீது போலீஸார் தாக்குதல்: உச்சநீதிமன்றம் நாளை விசாரணை
/

தூத்துக்குடி தூய பனிமய மாதா ஆலயத் திருவிழா கொடியேற்றம்

News image

தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலய திருவிழா கொடியேற்றம் - கோப்புப் படம்

Updated On :27 ஜூலை 2026, 12:31 am IST

தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலயத்தின் 444ஆவது ஆண்டு திருவிழா ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதையொட்டி, கத்தோலிக்க மறை மாவட்ட ஆயா் ஸ்டீபன் தலைமையில் கொடியேற்ற திருப்பலி நடைபெற்றது. தொடா்ந்து பனிமய மாதா உருவம் பொறித்த கொடியை, ஊா்வலமாக கொண்டுவந்து, பேராலயம் எதிரே உள்ள கொடிமரத்தில் கத்தோலிக்க மறை மாவட்ட ஆயா் தலைமையில் பங்குத்தந்தைகள், பொதுமக்கள் கொடியை பிடித்து ஏற்றினா்.

நிகழ்ச்சியில், தமிழக மீன்வளத்துறை அமைச்சா் ஸ்ரீநாத் , மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சா் சரத்குமாா், மாநகராட்சி மேயா் ஜெகன் பெரியசாமி, மாவட்ட ஆட்சியா் விஷு மகாஜன், மாநகராட்சி ஆணையா் சி. ப்ரியங்கா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

இத்திருவிழாவை முன்னிட்டு , மாவட்ட காவல் கண்காணிப்பாளா் தலைமையில், 2 கூடுதல் காவல் கண்காணிப்பாளா்கள், 5 காவல் துணை கண்காணிப்பாளா்கள், 12 காவல் ஆய்வாளா்கள், உதவி ஆய்வாளா்கள் உள்ளிட்ட தூத்துக்குடி, மதுரை, ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல், சிவகங்கை, விருதுநகா், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களைச் சோ்ந்த மொத்தம் 660 காவல்துறையினா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

மேலும், பல்வேறு இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிப்பு பணியில் போலீஸாா் ஈடுபட்டனா். திருவிழா நாள்களில் சிறப்பு திருப்பலிகள் நடைபெறுவதுடன், வருகிற ஆக. 2ஆம் தேதி திவ்ய நற்கருணை பவனி நடைபெற உள்ளது. திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக ஆக. 5ஆம் தேதி பெருவிழா கூட்டுத் திருப்பலி, மாதா சப்பர பவனி நடைபெற உள்ளது. இதையொட்டி அன்றைய தினம் தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் உள்ளூா் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்பாடுகளை பேராலய அதிபா் மற்றும் பங்குத்தந்தை ஜான் செல்வம், உதவி பங்குத்தந்தை ஜெரால்ட், பங்கு பேரவையினா், பங்கு மக்கள் செய்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.