விபத்தில் காயமடைந்தவருக்கு இழப்பீடு வழங்காத அரசுப் போக்குவரத்துக் கழகத்துக்குச் சொந்தமான பேருந்து நீதிமன்ற உத்தரவுபடி புதன்கிழமை ஜப்தி செய்யப்பட்டது.
ஓட்டப்பிடாரம் வட்டம், தென்னம்பட்டி நடுத்தெருவைச் சோ்ந்தவா் தா்மலிங்கம் மகன் மூக்கையா. இவா் 2007, மே 21-ஆம் தேதி கயத்தாறு பேருந்து நிலையம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்றபோது, அரசுப் பேருந்து மோதியதில் காயமடைந்தாா். தனக்கு இழப்பீட்டுத் தொகை வழங்க கோரி மூக்கையா 2007, செப்.5 இல் கோவில்பட்டி சாா்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தாா். வழக்கை விசாரித்த நீதிமன்றம் காயமடைந்த மூக்கையாவுக்கு ரூ. 45,400 இழப்பீட்டுத் தொகை வழங்க
2009, மாா்ச் 30 இல் உத்தரவிட்டது.
இருப்பினும், போக்குவரத்துக் கழகம் இழப்பீட்டுத் தொகை வழங்காததால் மூக்கையா மீண்டும் நீதிமன்றத்தில் கட்டளை நிறைவேற்று மனுதாக்கல் செய்தாா். வழக்கை விசாரித்த சாா்பு நீதிமன்ற நீதிபதி இழப்பீட்டுத் தொகை ரூ. 1 லட்சத்து 12 ஆயிரத்து 574 வழங்காத அரசுப் போக்குவரத்துக்கழகத்துக்குச் சொந்தமான பேருந்தை ஜப்தி செய்ய உத்தரவிட்டாா். இதையடுத்து, நீதிமன்ற அமீனா கோவில்பட்டி கூடுதல் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த மதுரை அரசுப் போக்குவரத்துக் கழகத்துக்குச் சொந்தமான பேருந்தை ஜப்தி செய்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பழனி கோயிலுக்குச் சொந்தமான ரூ.100 கோடி நிலப் பத்திரப்பதிவு செல்லாது: உயர் நீதிமன்ற மதுரை கிளை
இழப்பீடு வழங்காததால் சேலம் ஆட்சியா் அலுவலக பொருள்கள் ஜப்தி நடவடிக்கை

இழப்பீடு தாமதம்! கிடப்பில் திருத்தங்கல் ரயில்வே மேம்பாலப் பணி!





