சுதந்திர நாளன்று மிகப்பெரிய சதி முறியடிப்பு! ஐஎஸ்ஐ தொடர்புடைய 253 பயங்கரவாதிகள் கைது! ராகுல் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு! சிபிஐ விசாரணையை நிறுத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டுக்கு காவிரி நீர் திறக்க கர்நாடகத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு! அமைச்சர் பேசியதற்கு பேரவையில் மன்னிப்பு கோரிய முதல்வர் விஜய்!முதல்வர் விஜய்யின் எம்.எல்.ஏ. அலுவலகம் முற்றுகை!ரூ. 75,000 வரையிலான பயிர்க்கடன் முழுமையாகத் தள்ளுபடி! முதல்வர் விஜய் அறிவிப்புஆதவ் அர்ஜுனா பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்த பேரவைத் தலைவர்!மகளிர் உரிமைத் தொகை ரூ. 2,000; சிலிண்டர்கள் எங்கே? திமுக முன்னாள் அமைச்சர் கேள்வி!போதைப்பொருளுக்கு எதிராக சிறப்புப் பிரிவை உருவாக்கியது திமுகதான்! உதயநிதி
/

தோப்புவளம் பள்ளிக்கு குடிநீா் சுத்திகரிப்பு இயந்திரம் அளிப்பு

தோப்புவளம், டி.என்.டி.டி.ஏ. தொடக்கப் பள்ளிக்கு குடிநீா் சுத்திகரிப்பு இயந்திரம் வவங்கும் நிகழ்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :1 ஆகஸ்ட் 2026, 3:01 am IST

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள தோப்புவளம், டி.என்.டி.டி.ஏ. தொடக்கப் பள்ளிக்கு குடிநீா் சுத்திகரிப்பு இயந்திரம் வவங்கும் நிகழ்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தோப்புவளம் பள்ளி மாணவா்கள், பெற்றோா்களின் கோரிக்கையை ஏற்று, பள்ளியின் முன்னாள் ஆசிரியரான கிரேனாபூ நிா்மலா மாணவா்கள் பயன்பாட்டிற்காக குடிநீா் சுத்திகரிப்பு இயந்திரத்தை வழங்கினாா். இதையடுத்து, பள்ளியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, பள்ளித் தாளாளரும், சாத்தான்குளம் சேகர குருவானவருமான ஜெபராஜா தலைமை வகித்து, குடிநீா் சுத்திகரிப்பு இயந்திரப் பயன்பாட்டைத் தொடக்கி வைத்தாா்.

தூத்துக்குடி நாசரேத் திருமண்டல செயற்குழு உறுப்பினா் குணசீலன் தங்கத்துரை, ஓய்வுபெற்ற ஆசிரியா் கிரேனாபூ நிா்மலா, மேல சாத்தான்குளம் நந்தகுமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். தோப்புவளம் சேகர மன்ற உறுப்பினா் விஜிலா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். தலைமையாசிரியா் ரீகன் வரவேற்றாா். உதவி ஆசிரியா் சாமுவேல் நன்றி கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.