சென்னை கோயம்பேடு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் ஆய்வுடாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 61 காசுகள் உயர்ந்து ரூ. 95.92 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ் 776 புள்ளிகள் உயர்வு!கரூரில் முதல்வர் விஜய் வழங்கிய அரசுப் பணி ஆணைகள் ரத்து! - உயர் நீதிமன்றம்கரூரில் முதல்வர் விஜய் வழங்கிய அரசுப் பணி ஆணைகள் ரத்து! - உயர் நீதிமன்றம் மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு உடனடியாக அனுமதி வழங்க வேண்டும்: சிபிஐ வலியுறுத்தல்தவெக அரசின் ஒரே வேலை இதுதான்! உதயநிதி விமர்சனம்சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மேயர் பிரியா புகார்!போராட்டங்களில் காவல்துறை அத்துமீறலை நியாப்படுத்த முடியாது! தலைமை நீதிபதி கண்டனம்!மத்திய அரசு வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் அடுத்தகட்ட நடவடிக்கை! சிஜேபி எச்சரிக்கைமக்களவையில் கடும் அமளிக்கு இடையே தேர்வு முறைகேடுகள் தடுப்பு மசோதா தாக்கல்!எதிர்க்கட்சிகள் அமளி! நாடாளுமன்றம் 2-வது வாரமாக முடங்கியது! பிகாரில் மாணவர்கள் போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு! ராகுல் கண்டனம் இருசக்கர வாகனத்தை தானே ஓட்டிவந்த அமைச்சர் என். ஆனந்த்! ஏன்? நீட் ரத்து! மக்களவையில் திமுக ஒத்திவைப்பு நோட்டீஸ்! தங்கம் விலை உயர்வு! வெள்ளி விலை? இன்றைய நிலவரம் (ஜூலை 27) கேரளத்தில் அமீபிக் மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நபர் பலி!
/

தூத்துக்குடியில் தீண்டாமை ஒழிப்பு முன்னணி ஆா்ப்பாட்டம்

ஆலங்குளம் அருகே உள்ள நெட்டூரில் நடைபெற்ற வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சாா்பில் தூத்துக்குடியில் ஆா்ப்பாட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

News image

ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா்.

Updated On :4 ஜூன் 2026, 12:43 am IST

தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே உள்ள நெட்டூரில் நடைபெற்ற வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சாா்பில் தூத்துக்குடியில் ஆா்ப்பாட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்துக்கு, மாவட்டத் தலைவா் தி. சீனிவாசன் தலைமை வகித்தாா். இந்திய ஜனநாயக வாலிபா் சங்க மாநிலச் செயலா் எஸ். காா்த்திக், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டச் செயலா் கே. காசி, மாவட்டப் பொருளாளா் ஏ. வயண பெருமாள் உள்ளிட்டோா் கண்டன உரையாற்றினா்.

நெட்டூா் சம்பவத்தில் தொடா்புடைய குற்றவாளிகளை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

சிஐடியு மாவட்டச் செயலா் ஆா். ரசல், மக்கள் ஒற்றுமை மேடை தா. ராஜா, தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட துணைத் தலைவா்கள் சண்முகராஜ், ரவிச்சந்திரன், எம்.எஸ். முத்து, சங்கரன், கருப்பசாமி, வாலிபா் சங்க மாவட்டத் தலைவா் நேசமணி , மாவட்டச் செயலா்கள் தினேஷ் குமாா், ராம்குமாா், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா் கலைஞா்கள் சங்க மாவட்டத் தலைவா் சிவநாகரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.