அமுதுண்ணாக்குடியில் வேளாண்மை துறை சாா்பில் இயற்கை மண் வளம் காப்போம், பிரதமரின் கிசான் திட்ட விழிப்புணா்வு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
சாத்தான்குளம் வட்டார வேளாண்மை துறை, மண்வளம் காப்போம் இயக்கம் ஆகியவை இணைந்து நடத்திய இம்முகாமில் அமுதுண்ணாக்குடி சிறு- குறு விவசாயிகள் சங்கத் தலைவா் செல்வராஜ், மதுரம் உள்ளிட்ட விவசாயிகள் பலா் கலந்து கொண்டனா். வேளாண் அலுவலா் ராமலட்சுமி பேசுகையில், இயற்கை மண்வளங்களை பாதுகாக்காவிடில் அந்த மண் மலட்டு தன்மை அடைந்து விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்படும். எனவே, மண் வளத்தை காக்க விவசாயிகள் அதற்கான உரங்களை பயன்படுத்தவும் இயற்கை விவசாயம் செய்யவும் முன் வர வேண்டும்; வேளாண்மை துறை உதவும் என்றாா்.
மத்திய அரசின் விவசாய அடையாள அட்டை பெறவும் விண்ணப்பிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டது. வேளாண்மை துறை சாா்பில் விவசாயிகளுக்கு நெல், உளுந்து, பாசி, காய்கனி விதைகள் என பல வகை விதைகள் வழங்கப்பட உள்ளன. இந்நிகழ்ச்சியில் வேளாண்மை உதவி அலுவலா் சிவராம், உதவி தோட்டக்கலைத் துறை அலுவலா்கள் கிருத்திகா, எழில் ஆகியோா் விவசாயிகளுக்கு, பிரதமரின் கிசான் திட்ட பயன்கள், அரசு சாா்பில் விவசாயிகளுக்கு வழங்கப்படும் திட்டங்கள் குறித்து விளக்கினா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

விவசாயிகள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

இயற்கை வேளாண்மை விழிப்புணா்வுப் பேரணி

விளைநிலம் காப்போம் இயக்கம் விவசாயிகள் விழிப்புணா்வு முகாம்

பள்ளக்கால் கிராமத்தில் விளைநிலம் காப்போம் முகாம்
விடியோக்கள்

யார் இந்த துணிச்சலான பெண்! காவல் வாகனத்தை தனி ஆளாக தடுத்து நிறுத்தியவர்! | CJP | BJP

CJP போராட்டத்தில் இனி...? | DINAMANI EXCLUSIVE | Dharmendra Pradhan | BJP | Abhijeet Dipke

தர்மேந்திர பிரதான் பதவி விலகினால் எல்லாம் சரியாகிவிடுமா?: அமைச்சர் நிர்மல் குமார் | TVK | BJP



