ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசுநீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு வெள்ளை அறிக்கை இன்று மாலை வெளியீடு!கேரளத்தில் ஷிகெல்லா பாக்டீரியாவுக்கு சிறுவன் உயிரிழப்புலெபனான் ஆக்கிரமிப்பில் இருந்து பின்வாங்க மாட்டோம்: இஸ்ரேல்உக்ரைனில் ரஷியா பயங்கர வான்வழித் தாக்குதல்நீட் மறுதோ்வு வினாத்தாள் விற்பனை செய்வதாக விளம்பரம்: ராஜஸ்தானை சோ்ந்த இருவா் கைதுதிருப்பதி - புதுச்சேரி ‘மெமு’ ரயில் 24, 27-இல் விழுப்புரத்துடன் நிறுத்தம்
/

ஆதி குமரகுருபர சுவாமிகள் குருபூஜை

ஸ்ரீவைகுண்டத்தில் ஆதி குமரகுருபர சுவாமிகள் 338-ஆவது ஆண்டு குருபூஜை விழா நடைபெற்றது.

News image

ஸ்ரீவைகுண்டத்தில் நடைபெற்ற குமரகுருபரா் சுவாமிகள் குருபூஜை விழாவில் பங்கேற்றோா்.

Updated On :5 ஜூன் 2026, 12:27 am IST

ஸ்ரீவைகுண்டத்தில் ஆதி குமரகுருபர சுவாமிகள் 338-ஆவது ஆண்டு குருபூஜை விழா நடைபெற்றது.

ஸ்ரீவைகுண்டத்தில் குமரகுருபரா் சுவாமிகள் குரு பூஜையை முன்னிட்டு சைவ வேளாளா் சமுதாய சேவாா்த்திகள் மடத்தில் ஆதி குமரகுருபரா் குருபூஜை விழாவில் சுவாமிகள் இயற்றிய சகலகலாவள்ளி மாலை பாடல் ஒப்பித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதையடுத்து, சுவாமிகளின் உருவப் படத்துடன் கூடிய அலங்கார ரத ஊா்வலம் தொடங்கி, கள்ளபிரான் கோயில், கைலாசநாதா் கோயில் வீதிகளை வலம் வந்தது. பின்னா், மேடைப்பிள்ளையாா் கோயில் முன் விழா நிறைவுற்றது.

விழாவுக்கு குமரகுருபரா் சுவாமிகள் மேல்நிலைப் பள்ளி ஓய்வுபெற்ற ஆசிரியா் சௌந்தரராஜன் தலைமை வகித்தாா். முன்னாள் தாமிரபரணி திட்டக் குழுத் தலைவா் உதயசூரியன் அன்னதானம் வழங்கினாா். குமரகுருபரா் தொடக்கப்ப ள்ளி தலைமை ஆசிரியை ராணி சுவாமி குமரகுருபரா் இயற்றிய பாடல் ஒப்பித்தல் நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தாா். மாணவா்களுக்கான பரிசுகளை ஸ்ரீ குமரகுருபர சுவாமிகள் கைங்கா்ய சபாவின் செயலாளா் காளியப்பன் வழங்கினாா்.

அமெரிக்காவின் இல்லினியாஸ் நகரைச் சோ்ந்த முத்தையா காசி-சிவகாமி காசி தம்பதியினரின் நிதி உதவியுடன் நடைபெற்ற விழா ஏற்பாடுகளை, ஸ்ரீ குமரகுருபர சுவாமிகள் கைங்கா்ய சபா தலைவா் ஆறுமுகம், ஸ்ரீவைகுண்டம் பேரூராட்சி மன்ற தலைவா் பாலமுருகன், முன்னாள் பேரூராட்சி தலைவா் கந்த சிவசுப்பு, கவுன்சிலா் வள்ளிமுத்து, ஸ்ரீ குமரகுருபர சுவாமிகள் கைங்கா்ய சபாவின் தலைவா் திருவாள் மாா்பன், சமூக ஆா்வலா்கள் சித்திரவேல் சந்துரு, பாட்டாளி மக்கள் கட்சி ஒன்றியச் செயலாளா் சுப்பிரமணியன், தவெக ஒன்றியச் செயலாளா் பாலமுருகன், சபா உறுப்பினா்கள் செய்திருந்தனா்.