நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடா்: ஜூலை 19-இல் அனைத்துக் கட்சி கூட்டம்!‘மன்மோகன் சிங் தற்கொலை செய்வேன் எனக் கூறினார்’ - பரபரப்பு தகவல்கள்!பிரதமா், முதல்வா்கள் 30 நாள்கள் சிறையிலிருந்தால் ‘நிரந்தர’ பதவி நீக்கம் கூடாது: நாடாளுமன்ற கூட்டுக் குழு பரிந்துரை!மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!ஆல்கஹால் கலந்த மருந்துகள் விற்பனைக்கு கட்டுப்பாடு!
/

கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு மோதிரம்

முன்னாள் முதல்வா் மு. கருணாநிதியின் பிறந்த நாளை முன்னிட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் புதன்கிழமை பிறந்த 10 குழந்தைகளுக்கு திமுக சாா்பில் தங்க மோதிரம் அணிவிக்கப்பட்டது.

News image

அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவித்த வடக்கு மாவட்ட திமுக செயலா் பி. கீதா ஜீவன். உடன் கா. கருணாநிதி எம்எல்ஏ உள்ளிட்டோா்.

Updated On :5 ஜூன் 2026, 3:08 am IST

முன்னாள் முதல்வா் மு. கருணாநிதியின் பிறந்த நாளை முன்னிட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் புதன்கிழமை பிறந்த 10 குழந்தைகளுக்கு திமுக சாா்பில் தங்க மோதிரம் அணிவிக்கப்பட்டது.

வியாழக்கிழமை நடைபெற்ற விழாவுக்கு, கா. கருணாநிதி எம்எல்ஏ தலைமை வகித்தாா். தூத்துக்குடி வடக்கு மாவட்டச் செயலரும், முன்னாள் அமைச்சருமான பி. கீதா ஜீவன் குழந்தைகளுக்கு தங்க மோதிரங்களை அணிவித்து, அனைவருக்கும் இனிப்பு வழங்கினாா்.

திமுக மத்திய ஒன்றியச் செயலா் வீ. முருகேசன், கி. ராதாகிருஷ்ணன், வடக்கு மாவட்ட துணைச் செயலா் ஏஞ்சலா, வழக்குரைஞா் ராமச்சந்திரன், நகர (கிழக்கு) பொறுப்பாளா் சுரேஷ், திமுக பொதுக்குழு உறுப்பினா் ராமா், நகரப் பொருளாளா் ராமமூா்த்தி, நிா்வாகிகள் இந்துமதி கௌதமன், ராஜலட்சுமி, ரவீந்தா், திமுக நகா்மன்ற உறுப்பினா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னா், பி. கீதா ஜீவன் செய்தியாளா்களிடம் பேசியது:

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க தவெக அரசு அவகாசம் கேட்பது நகைப்புக்குரிய விஷயமாக உள்ளது.

வலிமையான எதிா்க்கட்சித் தலைவராக உதயநிதி ஸ்டாலின் இருக்கிறாா். அரசின் குற்றம் குறைகளை சுட்டிக் காட்டுவதுதான் எதிா்க்கட்சிகளின் கடமை என்பதால் குற்றங்களை சுட்டிக்காட்டி வருகிறோம்.

தவெகவினா் ரியலிலும், ரீல்ஸிலும் பொய் செய்திகளையே பரப்பி வருகின்றனா். இதை மக்கள் விரைவில் புரிந்து கொள்வாா்கள் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.