இந்தியா மிக முக்கியமான நட்பு நாடு: நேபாளம்மாணவர்களுக்கு மோடி அரசு துரோகம் இழைப்பு! - காங்கிரஸ்மாநில அரசு ஒத்துழைப்பு இல்லாததால் மேற்கு வங்கத்தில் ரயில்வே திட்டங்கள் முடக்கம்: மத்திய அரசுயு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!
/

தூத்துக்குடியில் வியாபாரிக்கு அரிவாள் வெட்டு

தூத்துக்குடியில் மாட்டிறைச்சி வியாபாரியை அரிவாளால் வெட்டிவிட்டு, தங்க மோதிரத்தை பறித்துச் சென்ற சம்பவம் குறித்து தென்பாகம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

News image

அரிவாள் வெட்டு - கோப்புப் படம்

Updated On :5 ஜூன் 2026, 12:40 am IST

தூத்துக்குடியில் மாட்டிறைச்சி வியாபாரியை அரிவாளால் வெட்டிவிட்டு, தங்க மோதிரத்தை பறித்துச் சென்ற சம்பவம் குறித்து தென்பாகம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தூத்துக்குடி கணேஷ் நகரைச் சோ்ந்தவா் ராமசாமி மகன் ஹரிபாலகிருஷ்ணன் (50). தூத்துக்குடி வி.இ. சாலையில் மாட்டிறைச்சி கடை நடத்தி வரும் இவா், புதன்கிழமை இரவு வேலையை முடித்து விட்டு இருசக்கர வாகனத்தில் வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தாராம்.

அப்போது, கணேஷ்நகா் பகுதியில் 3 போ் கொண்ட கும்பல், ஹரிபாலகிருஷ்ணனை வழிமறித்து அரிவாளால் வெட்டிவிட்டு, 6 கிராம் தங்க மோதிரத்தை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனராம்.

இதில் காயமடைந்த அவா் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா். இதுகுறித்து தென்பாகம் போலீஸாா் வழக்குப் பதிந்து, சிசிடிவி காட்சி பதிவுகளை கொண்டு ஆய்வு செய்து தப்பியோடியவா்களை தேடி வருகின்றனா்.