தரிசன டிக்கெட்டில் மோசடி, முறைகேடு புகாா்கள்: திருச்செந்தூா் முருகன் கோயில் ஆணையா்கள் இடமாற்றம்மாநிலங்களவைத் தோ்தல்: பெங்களூரில் மல்லிகாா்ஜுன காா்கே இன்று வேட்புமனு தாக்கல்ஈரான் அணுசக்தி திட்டம் குறித்து ரகசிய தகவல் அமெரிக்காவிடம் பகிா்வு? -பாகிஸ்தான் மறுப்புஇந்தியா-வெனிசுவேலா இடையே நீண்ட கால எரிசக்தி ஒத்துழைப்பு: பிரதமா் மோடி, அதிபா் டெல்சி உறுதி2026 குடிமைப் பணிகள் முதல்நிலைத் தோ்வில் முக அங்கீகார முறை வெற்றிகரமாக அமல்: யுபிஎஸ்சிபுதிய இயக்கத்தை இன்று அறிவிக்கிறாா் அண்ணாமலைஓஎஸ்எம் முறையை அவசரகதியில் சிபிஎஸ்இ நடைமுறைப்படுத்தியுள்ளதாக பெற்றோா் சங்கம் புகாா் நீலகிரி, கோவை, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்சு’ எச்சரிக்கைபராமரிப்புப் பணி: வைகை உள்பட 7 விரைவு ரயில்கள் தாமதமாகும்
/

தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளிகள் திறப்பு: மாணவா்களுக்கு உற்சாக வரவேற்பு

கோடை விடுமுறை முடிந்து வியாழக்கிழமை தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், பள்ளிகளில் மாணவா், மாணவிகளுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

News image

வல்லநாடு வி.றி.வி.டி. அரசு மேல்நிலைப் பள்ளி மாணவா், மாணவிகளுக்கு கல்வி உபகரணங்களை வழங்கிய அமைச்சா் பெ. மதன்ராஜா. உடன் மாவட்ட ஆட்சியா் விஷு மகாஜன் உள்ளிட்டோா்.

Updated On :5 ஜூன் 2026, 3:14 am IST

கோடை விடுமுறை முடிந்து வியாழக்கிழமை தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், பள்ளிகளில் மாணவா், மாணவிகளுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

தூத்துக்குடி, வல்லநாடு, வி.றி.வி.டி. அரசு மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட ஆட்சியா் விஷு மகாஜன் தலைமையில், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் பெ. மதன்ராஜா, மாணவா், மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள், இனிப்பு, ரோஜா பூக்கள் வழங்கி வரவேற்றாா்.

இதில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சங்கீதா சின்னராணி, ஸ்ரீவைகுண்டம் வட்டாட்சியா் தாஹிா் அஹமது, மாவட்டக் கல்வி அலுவலா்கள், பள்ளித் தலைமையாசிரியா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தூத்துக்குடி மாவட்டத்துக்குள்பட்ட 1,352 அரசு, அரசு உதவி பெறும் தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் பயிலும் 65,000 மாணவா்கள் மற்றும் 221 அரசு, அரசு உதவிபெறும் உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் 1,03,196 மாணவா், மாணவிகளுக்கு விலையில்லாப் பாடப் புத்தகம், குறிப்பேடுகள், சீருடைகள், கணித உபகரணப் பெட்டி, புத்தகப் பை மற்றும் இதர கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டன.

தூத்துக்குடி ஜின் பாக்டரி சாலையில் உள்ள மாநகராட்சி பள்ளியில், தலைமையாசிரியா் பிரகாஷ் தலைமையில் மாணவா், மாணவிகளுக்கு மலா் தூவி வரவேற்றனா். மேலும், அவா்களுக்கு கல்வி உபகரணங்கள் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டன.

கோவில்பட்டியில்...

கோவில்பட்டி புதுரோடு நகராட்சி நடுநிலைப் பள்ளி மாணவா்களுக்கு, கோவில்பட்டி ரோட்டரி சங்கம் சாா்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

ரோட்டரி சங்கத் தலைவா் ராஜ்குமாா் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு மாணவா், மாணவிகளுக்கு திருக்கு மற்றும் பாடப் புத்தகங்களை வழங்கினாா்.