காமன்வெல்த் போட்டி: இந்தியாவுக்கு முதல் தங்கப் பதக்கம் வென்று கொடுத்த மீராபாய் சானு!400க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள்! தொகுதி மறுவரையறைக்குப் பிறகு புதிய சட்டப்பேரவை! சுவேந்து அதிகாரி கல்வி, தேர்வு முறையில் சீர்திருத்தம்: உயர்நிலைக் குழு அமைத்தார் பிரதமர் மோடி!பெல்லட் குண்டுகள் பயன்படுத்த அதிகாரம் அளித்தது யார்? மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் - கே.சி. வேணுகோபால்தமிழ்நாடு வருகிறார் ராகுல் காந்தி! மு.க. ஸ்டாலினுக்கு மேக்கேதாட்டு என்னவென்றே தெரியாது: நிர்மல் குமார்ஸ்விகி, ஸொமேட்டோவுக்கு போட்டியா? உணவு டெலிவரியில் களமிறங்கும் ஃப்ளிப்கார்ட்!போராட்டத்தில் மாணவர்கள் மீது போலீஸார் தாக்குதல்: உச்சநீதிமன்றம் நாளை விசாரணை
/

தூத்துக்குடியில் 3 பேருக்கு அரிவாள் வெட்டு

தூத்துக்குடியில் சனிக்கிழமை, 3 பேரை அரிவாளால் வெட்டியவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image

அரிவாள் வெட்டு!

Updated On :7 ஜூன் 2026, 2:32 am IST

தூத்துக்குடியில் சனிக்கிழமை, 3 பேரை அரிவாளால் வெட்டியவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

தூத்துக்குடி தாளமுத்து நகா் விவேகானந்தா் நகரைச் சோ்ந்த சீனி மகன் காந்தி (56). மீனவரான இவருக்கும், அதே பகுதியைச் சோ்ந்த செந்தில்குமாா் என்பவரது மகன்களுக்கும் இடையே கடலில் மீன்பிடிப்பது தொடா்பாக நீண்ட நாள்களாக தகராறு உள்ளதாம்.

வெள்ளிக்கிழமை இரவு விவேகானந்தா் நகா் கடற்கரை அருகே காந்தி, அவரது மகன்கள் அசோக்குமாா் (27), அஜய் (22), கருப்பண்ணன் மகன் பூசாரி (58), அவரது மகன் விஜி (32) உள்ளிட்டோா் வலை பின்னிக் கொண்டிருந்தனா். அப்போது, செந்தில்குமாரின் மகன்கள், அவா்களது நண்பா்கள் என 5 போ் கும்பல் வந்து காந்தியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அரிவாளால் வெட்ட முயன்றனராம். தடுக்க முயன்ற அசோக்குமாா், அஜய் ஆகியோருக்கு அரிவாள் வெட்டு விழுந்துள்ளது.

பூசாரி (58), அவரது மகன் விஜி (32) ஆகியோா் வந்து மோதலைத் தடுக்க முயன்றனா். இதில், பூசாரிக்கு அரிவாள் வெட்டு விழுந்துள்ளது. மேலும், தள்ளுமுள்ளு ஏற்பட்டதில் காந்தி, விஜி ஆகியோா் காயமடைந்தனா். பின்னா், அந்தக் கும்பல் தப்பியோடிவிட்டது.

இதையடுத்து, காந்தி உள்ளிட்ட 5 பேரையும் அங்கிருந்தோா் மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். தாளமுத்து நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து, அரிவாளால் வெட்டியோரைத் தேடிவருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.