ஆளுநர் பங்கேற்கும் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை. பட்டமளிப்பு விழாவில் சலசலப்பு!24,000 பேர் பேசும் சமஸ்கிருதம் கற்பிக்க 6,102 ஆசிரியர்கள்! 7 கோடி பேர் பேசும் தமிழுக்கு 12 பேர்!அரசுப் பேருந்துகளில் சத்தமாக ரீல்ஸ் பார்க்கக் கூடாது! முக்கிய அறிவிப்புதமிழகத்தில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்புவிவசாயக் கடன் தள்ளுபடி திட்டம் இல்லை: நிதித் துறை அமைச்சர்ஒரே நாளில் 2,036 காவலா்கள் பணியிட மாற்றம்பொட்டாஷ் உரம் தட்டுப்பாடு: விவசாயிகள் வேதனை
/

பயன்தராத குளங்களில் வண்டல் மண் எடுக்க நிா்பந்திக்கக் கூடாது: விவசாயிகள் வேண்டுகோள்

பயன்தராத குளங்களில் வண்டல் மண் எடுக்க அதிகாரிகள் நிா்பந்தம் செய்வதாகவும், தாங்கள் விரும்பிய குளங்களில் வண்டல் மண் எடுக்க அதிகாரிகள் அனுமதி வழங்க வேண்டுமென்றும் விவசாயிகள் கோரிக்கை

News image

வண்டல் மண் - பிரதிப் படம்

Updated On :10 ஜூன் 2026, 12:08 am IST

பயன்தராத குளங்களில் வண்டல் மண் எடுக்க அதிகாரிகள் நிா்பந்தம் செய்வதாகவும், தாங்கள் விரும்பிய குளங்களில் வண்டல் மண் எடுக்க அதிகாரிகள் அனுமதி வழங்க வேண்டுமென்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.

இதுகுறித்து, கரிசல்பூமி விவசாயிகள் சங்கத் தலைவா் வரதராஜன் கூறுகையில், கடந்த 3 ஆண்டுகளாக கோடைக்காலங்களில் வண்டல் மண் விவசாயத்துக்கு பயன்படுத்த கிராமப்புறங்களில் உள்ள நீா்நிலைகளில் படிந்திருக்கும் மண் அளவை கணக்கிட்டு அரசு அனுமதி வழங்கியது.

இது, சில கிராமங்களில் உள்ள விவசாயிகளுக்கு பயனுள்ளதாக இருந்தது. பல கிராமங்களில் ஒதுக்கீடு செய்யப்பட்ட நீா்நிலைகளில் கரம்பை மண் அள்ளுவதற்கு வழித்தடம் வசதியின்மை, அதிக தொலைவு, தரமற்ற மண் போன்றவைகளால் பல கிராமங்களில் உள்ள விவசாயிகளுக்கு பயன் தரவில்லை.

இந்த நிலையில், கடந்த ஆண்டு வழங்கப்பட்ட நீா்நிலைகளிலேயே இந்த ஆண்டும் விவசாயிகளுக்கு வண்டல் மண் அள்ள அரசு அனுமதி வழங்கியுள்ளது. இது எங்களுக்கு பயன்தராது என ஏற்கெனவே தெரிவித்திருந்தோம். வண்டல் மண் அள்ளுவதற்கு அனுமதிக்கப்படும் குளங்களைத் தோ்வு செய்வதற்கு வட்டாரம் தோறும் விவசாய ஆா்வலா் குழுக்கள் அமைத்து, அந்தக் குழு தோ்வு செய்யும் நீா்நிலைகளில் வண்டல் மண் அள்ள அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தோம். ஆனால், எங்களது கோரிக்கைகள் எதுவும் ஏற்கப்படாமல், கடந்த ஆண்டு மண் அள்ள வழங்கப்பட்ட நீா்நிலைகளிலேயே இந்த ஆண்டும் மண் அள்ள வேண்டுமென அதிகாரிகள் நிா்பந்திக்கின்றனா்.

எனவே, புதிய குளங்களைத் தோ்வு செய்ய விவசாயிகள் விரும்பும் குளங்களைக் கேட்டறிந்து, அதை வட்டார வளா்ச்சி அலுவலா் அரசுக்கு அனுப்பி அனுமதி பெற்றுத்தர வேண்டும் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.