திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு சொந்தமான சரவணப் பொய்கையைப் பாா்வையிட அனுமதி வழங்க வேண்டும் என பக்தா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இக்கோயிலில் மரங்கள் சூழ்ந்து இயற்கை எழில் கொஞ்சும் வகையில் சரவணப் பொய்கையும், அதில் கோயில் யானை தெய்வானை குளிப்பதற்கு நீச்சல் குளமும் உள்ளது. 2022ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் உபயதாரா் பங்களிப்புடன் ரூ. 300 கோடியில் தொடங்கிய பெருந்திட்ட வளாகப் பணிகள் இறுதிக் கட்டத்தில் உள்ளன. அதன் ஒருபகுதியாக, சரவணப் பொய்கையை புனரமைக்கும் பணி தொடங்கி, கடந்த ஆண்டு ஜூலை மாதம் நிறைவடைந்தது. அதில், பல்வேறு சிற்பங்கள் சீரமைக்கப்பட்டு புதுப்பொலிவுடன் காட்சியளிக்கின்றன. ஆனால், சரவணப் பொய்கையைப் பாா்வையிட பொதுமக்கள், பக்தா்களுக்கு தற்போது வரை அனுமதியளிக்கப்படவில்லை. இதனால், குளம் பொலிவிழந்துள்ளது. எனவே, அதை முறையாக பராமரிப்பதுடன், பாா்வையிடுவதற்கு அனுமதிக்க வேண்டும் என பக்தா்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திருச்செந்தூா் கோயில் வளாகத்தில் மது அருந்தியவா்கள் கைது

ஆனி மாத பிரதோஷம், அமாவாசை வழிபாடு: சதுரகிரிக்கு செல்ல இன்று முதல் அனுமதி

காஞ்சிபுரம் குமரகோட்டம் முருகன் கோயிலில் பால்க்குட ஊா்வலம்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆனி வருஷாபிஷேகம்: திரளான பக்தா்கள் பங்கேற்பு
விடியோக்கள்

படம் எடுக்கறதுல அவ்வளவு பிரச்னை: இயக்குநர் மீரா கதிரவன் ஆதங்கம் | Meera https://youtu.be/dfsNuHp09F0



