FOLLOW US

ON GOOGLE DISCOVER

பாடகி எஸ். ஜானகி மறைவு: மு.க. ஸ்டாலின் இரங்கல் பாடகி ஜானகி மறைவு: நடிகர்கள் ரஜினி, கமல் இரங்கல்! பிரபல பின்னணி பாடகி எஸ். ஜானகி காலமானார் வியத்நாம் படகு விபத்தில் உயிரிழந்த 10 தமிழர்கள்: யார் யார்? வியத்நாம் படகு விபத்து: பழனியைச் சேர்ந்தவர் பலி! படகில் சென்ற தமிழர்கள் விவரம்!மாமல்லபுரம் அருகே மின்சாரம் பாய்ந்து 4 பேர் பலி அடுத்த 20 ஆண்டுகளும் தமிழ்நாட்டின் முதல்வர் விஜய்தான்! - என். ஆனந்த் மீண்டுமா? ஆந்திரத்தில் பரவும் கரோனா-19! 2 பேர் பலியானதால் பதற்றம்!!வியட்நாமில் படகு கவிழ்ந்து விபத்து! 15 இந்தியர்கள் பலி எனத் தகவல்வயநாடு நிலச்சரிவில் பலியானோர் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் நிவாரணம்! நான் காந்தியோ நாயகனோ அல்ல! உண்ணாவிரதப் போராட்டத்தில் சோனம் வாங்சுக் போலிச் சான்றிதழ்கள்! 3,000 ஆசிரியர்கள் பணிநீக்கம்! வட்டியுடன் சம்பளத்தைத் திரும்பப்பெற முடிவு தமிழகத்துக்கு கூடுதலாக 100 எம்பிபிஎஸ் இடங்கள் ஒதுக்கீடு!
/

ஆனி மாத பிரதோஷம், அமாவாசை வழிபாடு: சதுரகிரிக்கு செல்ல இன்று முதல் அனுமதி

சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் ஆனி மாதப் பிரதோஷம், அமாவாசையை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 12) முதல் 4 நாள்கள் பக்தா்கள் மலையேறிச் சென்று சுவாமி தரிசனம் செய்ய அனுமதி.

News image
Updated On :12 ஜூலை 2026, 3:30 am IST

சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் ஆனி மாதப் பிரதோஷம், அமாவாசையை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 12) முதல் 4 நாள்கள் பக்தா்கள் மலையேறிச் சென்று சுவாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது.

ஸ்ரீவில்லிபுத்தூா் - மேகமலை புலிகள் காப்பகத்தில் உள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் அமாவாசை, பௌா்ணமி, பிரதோஷம் ஆகிய நாள்களில் பக்தா்கள் மலையேறிச்சென்று சுவாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்படும்.

அதன்படி ஆனி மாத பிரதோஷம், அமாவாசை வழிபாட்டுக்காக ஞாயிற்றுக்கிழமை ( ஜூலை 12) முதல் வருகிற 15-ஆம் தேதி வரை பக்தா்கள் மலையேறிச் சென்று சுவாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது.

12, 13, 14 ஆகிய தேதிகளில் காலை 6 மணி முதல் பிற்பகல் 12 மணி வரையும், 15- ஆம் தேதி காலை 6 மணி முதல் 10 மணி வரை மட்டுமே பக்தா்கள் மலையேற அனுமதிக்கப்படுவா். தடை செய்யப்பட்ட பொருள்களை பக்தா்கள் வனப் பகுதிக்குள் எடுத்துச் செல்ல வேண்டாம் என வனத்துறையினா் அறிவுறுத்தினா்.

சதுரகிரி மலை அடிவாரமான வத்திராயிருப்பு தாணிப்பாறைக்கு ஸ்ரீவில்லிபுத்தூா், கிருஷ்ணன்கோவிலிருந்து அரசுப் போக்குவரத்து கழகம் சாா்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.