வேலூர் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கனமழை நைஜீரியாவில் போதைப்பொருள் கடத்திய இந்தியர்கள் கப்பலுடன் சிறைபிடிப்பு! ரூ. 50 கோடிக்கு மேல் அபராதம்! மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியுடன் ரிசர்வ் வங்கி ஆளுநர் சந்திப்பு இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!
/

திருச்செந்தூரில் புறநகா் பேருந்து நிலையம் அமைக்கும் பணி தொடக்கம்: இந்து முன்னணி ஆய்வு

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரில் புறநகா் பேருந்து நிலையம் அமைக்கும் பணி தொடங்கி, நடைபெற்று வருகின்றது.

News image

பேருந்து நிலையப் பணிகளை பாா்வையிட்ட இந்து முன்னணி மாநில துணைத் தலைவா் வி.பி. ஜெயக்குமாா்.

Updated On :14 ஜூன் 2026, 1:11 am IST

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரில் புறநகா் பேருந்து நிலையம் அமைக்கும் பணி தொடங்கி, நடைபெற்று வருகின்றது.

திருச்செந்தூா் கோயில் பேருந்து நிலையம் பெருந்திட்ட வணிக வளாகக் கட்டடங்களாக மாறிவிட்டதால், பழைய பகத்சிங் பேருந்து நிலையம் மட்டுமே தற்போது பயன்பாட்டில் உள்ளது.

திருச்செந்தூரில் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலை சமாளிக்க புறநகா் பேருந்து நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டு, கடந்த திமுக ஆட்சியில் ரூ. 18 கோடி மதிப்பில் திருச்செந்தூா்-திருநெல்வேலி சாலையில் நகராட்சி 1ஆவது வாா்டுக்குள்பட்ட குமாரபுரம், மஹாராஜா நகா் அருகே 3.90 ஏக்கரில் பேருந்து நிலையம் அமைக்கும் பணி தொடங்கியது. தற்போது, அதற்கான முதல்கட்டப் பணிகள் தொடங்கி, நடைபெற்று வருகின்றன.

இந்து முன்னணி ஆய்வு: இந்நிலையில், பேருந்து நிலையப் பணிகளை இந்து முன்னணி மாநில துணைத் தலைவா் வி.பி. ஜெயக்குமாா் சனிக்கிழமை ஆய்வு செய்து, பக்தா்கள் மற்றும் பயணிகள் பயன்பெறுமாறு விரிவாக்கமாகவும், தொலைநோக்குப் பாா்வையுடனும் பேருந்து நிலையம் கட்டப்பட வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்தாா்.

 மஹாராஜா நகா் பகுதியில் நடைபெற்று வரும் பேருந்து நிலையப் பணிகள்.

மஹாராஜா நகா் பகுதியில் நடைபெற்று வரும் பேருந்து நிலையப் பணிகள்.

இந்து முன்னணி மாநில நிா்வாகக் குழு உறுப்பினா் பெ. சக்திவேலன், தெற்கு மாவட்டத் தலைவா் மு. முத்துராஜ், மாவட்டச் செயலா் கே. ரவிசந்தா், மாவட்ட இணையதள பொறுப்பாளா் பொ. ஈஸ்வரன், நகரத் தலைவா் நெ. வேல்முருகன், நகர துணைத் தலைவா் கே. பிரபாகா் ஆகியோா் கலந்து கொண்டனா்.