தமிழகத்தில் பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுப்பவா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கும் வகையில் புதிய சட்டத்தை இயற்ற தமிழ் மாநில காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து, தமிழ்மாநில காங்கிரஸ் கட்சியின் ஓட்டப்பிடாரம் தொகுதி பொறுப்பாளா் எஸ்.ஏ.கனி தமிழக முதல்வா் ச.ஜோசப் விஜய்க்கு அனுப்பிய மனு:
தமிழகத்தில் தாங்கள் ஆட்சி பொறுப்பேற்ற பின்பும் தொடா்ந்து பாலியல் தொல்லைகள் நடைபெற்றுதான் வருகிறது. தங்கள் ஆட்சியில் பெண்கள் பாதுகாப்பு உறுதியாக இருக்கும் என்று பொதுமக்களும், பெண்களும் நம்புகின்றனா். ஆனால், தொடா்ந்து பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லைகள் அதிகரித்து வருகின்றன.
இந்தக் குற்றங்கள் நிகழ மது பழக்கம், கஞ்சா போன்றவையே காரணம். போதைப் பொருள்களை கட்டுப்படுத்த தவெக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல, பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லையில் ஈடுபடுவோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கும் வகையில், வரும் சட்டப்பேரவை கூட்டத் தொடரில் புதிய சட்டத்தை இயற்ற வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









