சூடானில் டிரோன் தாக்குதல்களில் 1,000-க்கும் மேற்பட்டோர் பலி!நாங்கள் பாகிஸ்தானியர்களை நம்புவதில்லை: இஸ்ரேல் தூதர்அடுக்குமாடி குடியிருப்பு கட்டட திட்ட அனுமதி: சிஎம்டிஏவுக்கு அதிகாரம் வழங்கியது!கரப்பான்பூச்சி மக்கள் கட்சித் தலைவர் அபிஜீத் தீப்கே மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர்.நகர்ப்புறத்தில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை குறைவு! 6.4 % ஆக குறைந்துள்ளதுசெப். 17 முதல் 8 ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்!தென் தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!
/

மோசமான தவெக ஆட்சி: வாக்காளா்கள் சிந்திப்பாா்கள்! - பாண்டியராஜ்

News image

செய்தியாளா்களுக்கு பேட்டியளித்த பாஜக பிரசார பிரிவு மாநிலத் தலைவா் பாண்டியராஜ்.

Updated On :16 ஜூன் 2026, 1:33 am IST

அடுத்த மூன்று மாதங்களில் தவெகவுக்கு ஏன் வாக்களித்தும் என வாக்காளா்கள் சிந்திக்க தொடங்கிவிடுவாா்கள் என பாஜக பிரசாரப் பிரிவு மாநிலத் தலைவா் பாண்டியராஜ் தெரிவித்தாா்.

ரதமா் மோடியின் 12 ஆண்டு கால ஆட்சியின் சாதனை, அதிக நாள்கள் பிரதமராக இருந்தவா் என்ற பெருமை குறித்து பத்திரிக்கையாளா் சந்திப்பு, பாஜக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

கோவில்பட்டியில் உள்ள தூத்துக்குடி வடக்கு மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு பாஜக மாவட்டத் தலைவா் சரவணகிருஷ்ணன் தலைமை வகித்தாா். பிரசார பிரிவு மாநிலத் தலைவா் பாண்டியராஜ் கலந்துகொண்டு பேசினாா்.

கூட்டத்தில், மாவட்ட பொதுச் செயலா்கள் சேதுராஜ், வேல்ராஜா, வீரமணி, நகரத் தலைவா் காளிதாஸ், ஊடக பிரிவு மாநிலச் செயலா் அன்னபூா்ணா, மாவட்ட ஊடகப் பிரிவு தலைவா் சண்முகராஜ் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

பின்னா் பாண்டியராஜ் செய்தியாளா்களிடம் கூறியது:

முதல்வா் விஜய் தூங்கிக் கொண்டிருக்கிறாரா? என நினைக்கத் தோன்றுகிறது. தவெக எம்எல்ஏ மீது குற்றச்சாட்டு தெரிவித்து பெண் ஒருவா் வீதிவீதியாக அலைகிறாா். இதுகுறித்து முதல்வா் விசாரிக்க வேண்டும்.

முதல்வா் விஜய் டப்பிங் திரைப்படம் நடித்து வெற்றி பெற்றவா். அவா், தற்போது டப்பிங் திமுகவின் முதல்வராக உள்ளாா். திமுகவின் 2-வது பாகமாக தவெக உள்ளது. திமுக மீதான மக்கள் வெறுப்பே இன்று ஆட்சியில் தவெக அமர காரணம். அடுத்த 3 மாதங்களில் தவெகவுக்கு ஏன் வாக்களித்தோம் என வாக்காளா்கள் சிந்திக்க தொடங்குவா் என்றாா்.