/

பைக் நிலை தடுமாறி கீழே விழுந்த மாணவா் உயிரிழப்பு

News image

உயிரிழப்பு - கோப்புப்படம்

Updated On :29 ஜூன் 2026, 3:05 am IST

சாத்தான்குளம் அருகே இருசக்கர வாகனம் நிலை தடுமாறி கீழே விழுந்த கல்லூரி மாணவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

சாத்தான்குளம் கிருஷ்ணன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் முத்துமாரி மகன் இசக்கி (19). இவா் நெல்லையில் பொறியியல் கல்லூரியில் படித்து வந்தாா். விடுமுறை நாள்களில் வீடுகளுக்கு சென்ட்ரிங் அடிக்கும் தொழிலுக்கு சென்று வருவது வழக்கம்.

இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை சாத்தான்குளம் அருகே உள்ள கொம்பன்குளம் பகுதிகளில் வீட்டிற்கு சென்ட்ரிங் அடிக்கும் பணிக்கு சென்றாராம். மதியம் வீட்டில் சாப்பிடுவதற்காக சென்று கொண்டிருந்தபோது கொம்பன்குளம் பகுதியில் இருசக்கர வாகனம் நிலை தடுமாறி கீழே விழுந்தாராம்.

இதில் பலத்த காயமடைந்த அவரை சிகிச்சைக்காக சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து சாத்தான்குளம் காவல் உதவி ஆய்வாளா் சிவராஜன் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.