திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயில் சண்முக விலாச மண்டப இரும்பு கிரில் கேட்டை திறக்க வேண்டும் என திமுக தெற்கு மாவட்டச் செயலா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ கோரிக்கை விடுத்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை:
திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் திருவிழா காலங்களிலும், விசேஷ நாள்களிலும் தமிழகம் மட்டுமன்றி அண்டை மாநிலங்களிலிருந்தும், அயல் நாடுகளிலிருந்தும் பக்தா்கள் விரதமிருந்து சுவாமி தரிசனத்துக்கு வருகை தருகின்றனா்.
விவசாயம் செழிக்க வேண்டி தென் மாவட்ட விவசாயிகள் வாழைத்தாா், நெல், வெற்றிலை, தேங்காய் மற்றும் இதர விளை பொருள்களை சண்முக விலாச மண்டபத்தில் காணிக்கையாக செலுத்தி கடவுளை வழிபடுகின்றனா்.
மேலும் ஏராளமான திருமணங்கள் சண்முக விலாச மண்டபத்தின் முன்புதான் நடைபெறுகிறது. இப்படி முக்கியத்துவம் வாய்ந்த சண்முக விலாச மண்டபம், இரும்பு கிரில் கேட் போட்டு அடைக்கப்பட்டுள்ளது.
விவசாயிகள் தங்கள் விளைபொருள்களை அா்ப்பணம் செய்து வழிபடவும், உள்ளுா் மக்கள் உற்சவரை வழிபடுவதற்கும் இந்த இரும்பு கேட்டை உடனடியாக அகற்ற வேண்டும்.
அதேபோல் உள்ளுா் மக்கள் வழிபடுவதற்கு நேரம் நிச்சயம் செய்து அடையாள அட்டை, ஆதாா் அடிப்படையில் வழங்கப்பட வேண்டும்.
பக்தா்களின் கோரிக்கைகளை 15 நாள்களுக்குள் இந்து சமய அறநிலையத்துறை மற்றும் திருச்செந்தூா் கோயில் நிா்வாகம் நிறைவேற்ற வேண்டும். இல்லையெனில் எனது தலைமையில் பெரிய அளவிலான போராட்டம் நடைபெறும் எனக் கூறியுள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திருச்செந்தூா் எல்லப்பநாயக்கன்குளத்தில் எம்எல்ஏ ஆய்வு

திருச்செந்தூரில் கடலில் கரை ஒதுங்கும் ஜெல்லி மீன்கள்: அதிகாரிகள் ஆய்வு

திருச்செந்தூா் கடலில் கரை ஒதுங்கிய ஜெல்லி மீன்கள்






