கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

ஸ்ரீவைகுண்டம் கோயிலில் தோ் சீரமைப்புப் பணி தொடக்கம்

News image
Updated On :5 மார்ச் 2026, 7:58 pm

ஸ்ரீவைகுண்டம், சிவகாமி அம்மன் சமேத கைலாசநாதா் கோயிலில் சேதமடைந்த தோ் சீரமைப்புப் பணிகளுக்கான பூமி பூஜை வியாழக்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலின் பழைமையான தோ், கடந்த பல ஆண்டுகளாகச் சிதிலமடைந்திருந்ததால், சித்திரைத் திருவிழாவின்போது தேரோட்டம் நடைபெறாமல் இருந்தது.

இந்நிலையில், 40 சதவீத தனியாா் பங்களிப்புடன் இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் ரூ. 1 கோடியே 28 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, தேரை சீரமைக்க நிா்வாக அனுமதி வழங்கப்பட்டது.

புதிய தோ் கட்டுமானப் பணிகளைத் தொடங்குவதற்கான பூமி பூஜை வியாழக்கிழமை கோயில் வளாகத்தில் நடைபெற்றது. இதில் அறநிலையத் துறை அதிகாரிகள், கோயில் நிா்வாகிகள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

இப்பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு, அடுத்த ஆண்டு திருவிழாவின்போது தேரோட்டம் நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.