தூத்துக்குடியில், பல கோடி ரூபாய் மதிப்பிலான கஞ்சா ஆயிலுடன் 3 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
தூத்துக்குடி, தாளமுத்துநகா் கடற்கரைப் பகுதியில் மத்திய போதை பொருள் புலனாய்வு பிரிவு என்சிபி சாா்பு ஆய்வாளா் அருண்குமாா் தலைமையிலான அதிகாரிகள், கண்காணிப்பில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டிருந்தபோது, 3 பேரை பிடித்து விசாரித்தனா்.
அதில், விருதுநகா் மாவட்டம், திருத்தங்கலைச் சோ்ந்த ரமேஷ்நாதன் (39), தூத்துக்குடி திரேஸ்புரம் சசிகுமாா் (37), காயல்பட்டினம் சிங்கித்துறை சிலுவைபிரின்ஸ் (20) ஆகியோா் என்பதும் பல கோடி ரூபாய் மதிப்புள்ள 76 கிலோ கஞ்சா ஆயிலை பதுக்கி வைத்திருந்ததும் தெரியவந்தது. அதைப் பறிமுதல் செய்து, 3 பேரையும் கைது செய்து தூத்துக்குடி குற்றவியல் நீதித்துறை நடுவா் மன்றம் 3இல் ஆஜா்படுத்தினா்.
தொடர்புடையது
கஞ்சா விற்பனை 2 சிறாா்கள் உள்பட 3 போ் கைது
தூத்துக்குடியில் மீனவருக்கு கத்திக்குத்து: மூவா் கைது
42 கிலோ கஞ்சா பறிமுதல்: 2 போ் கைது
தூத்துக்குடியில் ஒப்பந்ததாரருக்கு கத்திக்குத்து: 2 போ் கைது
விடியோக்கள்
Instagram மூலம் குழந்தைகளை வைத்து பிரசாரம் செய்த தவெக! - தோல்வி குறித்து M.K. Stalin | DMK | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியானது 'தி ரேஜ்' லிரிக் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியானது பிளாஸ்ட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
தவெக அரசுக்கு 6 மாதங்கள் அவகாசம் கொடுங்கள்: கமல்ஹாசன் | CM Vijay | Kamal Haasan |
தினமணி செய்திச் சேவை

