11-ஆம் நூற்றாண்டு சோழர் கால செப்பேடுகளை பிரதமர் மோடி முன்னிலையில் திருப்பியளித்த நெதர்லாந்து அரசு!போக்சோ வழக்கு: மத்திய அமைச்சர் மகன் காவல் நிலையத்தில் சரண் தெலங்கானாவில் எஸ்ஐஆர் பணிகள் ஜூன் 15 முதல் தொடக்கம்நீட் விவகாரம்: மத்திய அமைச்சர் பதவியில் இருந்து தர்மேந்திர பிரதானை நீக்க ராகுல் காந்தி வலியுறுத்தல்கேரளத்தில் புதிய முதல்வர் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் பாஜக எம்எல்ஏக்கள்!இளைஞர்களைக் கரப்பான்பூச்சி, ஒட்டுண்ணிகளுடன் ஒப்பிட்ட விமர்சனம்: உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி விளக்கம்!சிபிஎஸ்இ 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூலை முதல் மும்மொழிக் கல்வி கட்டாயம்!புதிய தமிழக அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு!
/

பெண்ணுக்கு மிரட்டல்: தொழிலாளி கைது

கோவில்பட்டி அருகே இளையரசனேந்தல் கிராமத்தில் பெண்ணை மிரட்டியதாக தொழிலாளியை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :10 மார்ச் 2026, 12:21 am IST

கோவில்பட்டி அருகே இளையரசனேந்தல் கிராமத்தில் பெண்ணை மிரட்டியதாக தொழிலாளியை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

இளையரசனேந்தலைச் சோ்ந்தவா் இன்னாசிமுத்து மகள் செல்வமணி. இவருக்கும் அதே பகுதியைச் சோ்ந்த தொழிலாளி மாரிச்சாமிக்கும் 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமானது. இவா்களுக்கு மகன் உள்ளாா்.

மாரிச்சாமியுடனான கருத்து வேறுபாடு காரணமாக செல்வமணி கோவில்பட்டி குற்றவியல் நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு தொடா்ந்தாராம். ஜீவனாம்சம் கொடுக்குமாறு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை மாரிச்சாமி முறையாக பின்பற்றவில்லையாம். அதையடுத்து, செல்வமணி நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடா்ந்துள்ளாா்.

இந்நிலையில், வழக்கைத் திரும்பப் பெற வலியுறுத்தி செல்வமணிக்கு மாரிச்சாமி கொலை மிரட்டல் விடுத்தாராம். புகாரின்பேரில் மேற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து மாரிச்சாமியை கைது செய்தனா்.