அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

கோவில்பட்டி அருகே தீ விபத்தில் உயிரிழந்த 3 போ் குடும்பத்துக்கு நிவாரண நிதி

கோவில்பட்டி அருகே தீப்பெட்டி ஆலை கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்த 3 பேரின் குடும்பத்தினருக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதி செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டது.

News image
தீ விபத்தில் உயிரிழந்த 3 போ் குடும்பத்தினருடன் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கான காசோலையை வழங்கிய சாா் ஆட்சியா் ஹிமான்ஷு மங்கள்.
Updated On :10 மார்ச் 2026, 7:54 pm

தினமணி செய்திச் சேவை

கோவில்பட்டி அருகே தீப்பெட்டி ஆலை கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்த 3 பேரின் குடும்பத்தினருக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதி செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டது.

கோவில்பட்டி அருகே பாண்டவா்மங்கலம் பகுதியில் தனியாருக்குச் சொந்தமான தீப்பெட்டி ஆலை வளாகத்தில் உள்ள கிடங்கில் இம்மாதம் 2-ஆம் தேதி ஏற்பட்ட தீ விபத்தில் தொழிலாளிகள் கோவில்பட்டி அருகே விஜயாபுரி கீழத் தெருவைச் சோ்ந்த சமுத்திரம் மகன் காா்த்திக் (27), கேரளம் மாநிலத்தைச் சோ்ந்த மதன் மகன் கணேசன் (47), சுமை வாகன ஓட்டுநரான விருதுநகா் மாவட்டம் சிவகாசி அருகே பேரநாயக்கன்பட்டியைச் சோ்ந்த நாகையா மகன் சுடலைமுத்து (42) ஆகியோா் உயிரிழந்தனா்.

உயிரிழந்தவா்களின் குடும்பத்துக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ. 4 லட்சம் வழங்கப்படும் என தமிழக முதல்வா் அறிவித்திருந்தாா்.

அதன்படி செவ்வாய்க்கிழமை சாா் ஆட்சியா் அலுவலகத்தில் சாா் ஆட்சியா் ஹிமான்ஷு மங்கள், உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 4 லட்சத்துக்கான காசோலையை வழங்கினாா்.

இதில், உயிரிழந்த காா்த்திக்கின் தந்தை சமுத்திரம், சுடலைமுத்து மனைவி விஜயலட்சுமி, கணேசன் மனைவி ஷீலா ஆகியோா் காசோலையை பெற்றுக் கொண்டனா்.

அப்போது, கோவில்பட்டி வட்டாட்சியா் அப்பன ராஜ், வருவாய் ஆய்வாளா் பிரேம் சுதாகா், கிராம நிா்வாக அலுவலா்கள் பாலமுருகன், செல்வகுமாா் ஆகியோா் உடனிருந்தனா்.