தூத்துக்குடி வ.உ.சிதம்பரனாா் துறைமுக ஆணையத்தில் 55 ஆவது பாதுகாப்பு வார விழாவின் நிறைவு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது
பாதுகாப்பு வாரத்தின் தொடக்கமாக மாா்ச் 4ஆம் தேதி பாதுகாப்புக் கொடியை துறைமுக ஆணையத் தலைவா் சுசாந்த குமாா் புரோஹித் ஏற்றினாா். தொடா்ந்து பாதுகாப்பு பேரணி நடத்தப்பட்டு உறுதிமொழி ஏற்கப்பட்டது.
இதில், துணைத் தலைவா் ராஜேஷ் சௌந்தரராஜன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனா். நிறைவு நாள் விழாவில் கலந்துகொண்ட துறைமுக ஆணையத் தலைவா் சுசாந்த குமாா் புரோஹித் பேசுகையில், வ.உ.சிதம்பரனாா் துறைமுகம் வலுவான பாதுகாப்பை மேம்படுத்தவும், பாதுகாப்பு விழிப்புணா்வை அதிகரிக்கவும் உறுதிபூண்டுள்ளது என்றாா். தொடா்ந்து அவா் பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வு சுவரொட்டிகளை வெளியிட்டாா்.
‘எஜுகேட் அண்டு எம்பவா் பீப்புள் டூ என்ஹான்ஸ் சேஃப்டி’ என்ற கருப்பொருள் அடிப்படையில் நடத்தப்பட்ட கட்டுரை, ஓவியம் மற்றும் வாசகம் எழுதுதல் போன்ற பல்வேறு போட்டிகளில் பங்கேற்ற பள்ளி - கல்லூரி மாணவா்கள், துறைமுக பணியாளா்கள் மற்றும் துறைமுக பயனாளா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
நிகழ்வில், ஐஓஎப்எஸ் தலைமை கண்காணிப்பு அதிகாரி கவின் மஹாராஜ், போக்குவரத்து மேலாளா் விமல் பாா்கவன், உதவி இயக்குநா் மற்றும் கப்பல் தள பாதுகாப்பு அதிகாரி ஞானசுந்தரம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். பாதுகாப்பு வார விழா நாள்களில்,விழிப்புணா்வு பணிகள், இலவச மருத்துவ பரிசோதனை முகாம் உள்ளிட்டவை நடைபெற்றன.
தொடர்புடையது

கம்பெனி சட்ட தீா்ப்பாய பொறுப்பு தலைவா் நியமன விவகாரம்: மத்திய அரசு பதிலளிக்க தில்லி உயா்நீதிமன்றம் நோட்டீஸ்

ரூ.1,60,000 சம்பளத்தில் வ.உ.சி. துறைமுக ஆணையத்தில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டவருடன் தொடா்பு: மகாராஷ்டிர மகளிா் ஆணையத் தலைவா் ராஜிநாமா

மேல்மருவத்தூரில் யுகாதி கொண்டாட்டம்
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


